பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்627

 அடையார்தெவ் வுறக்காப்ப தரிதாயி
           னாருயிர்நீ வாரின் னோரை
 இடைமீள விடலறியா தமக்கழிவெய்
           துறுங்காறு மெரிவாய்க் கும்பி.

(இ - ள்.) காளை ஆ இவற்றைப் பாரஞ்சுமக்கச் செய்தோரும் இவற்றை வெறுத்தோரும், அவற்றின்மிசை ஏறிச் செலுத்தினோரும் இத்தகைய தீவினையாளரைக் கொல்லாத கடையராகிய மன்னர் முதலியோரும், கன்று நலியும்படி பாலைக்கறந்துண்டவரும், அவற்றைப் பகைவர் பற்றாதவாறு பாதுகாவாதோரும், பகைவர் கவர்ந்துழிக்காப்பதியலாவிடத்தே தமது அரிய உயிரை விடாதவரும் ஆகிய இவரை எல்லாம் எரிகின்ற தீவாய்நிரயம் தான் கெடுந்துணையும் விழுங்கிய தன் வாய்திறந்து இடையே மீளவிட மாட்டாது.

(வி - ம்.) காவுதல் - சுமத்தல். காதா - கொல்லாத. அடையார் - பகைவர். தெவ்வுற - கவர.

(499)

 ஏற்றின்மிசை சுமையேற்றும் வினையிறைக்கு
           விடைபதினொன் றீத்தோ ராண்டு
 போற்றினிரை கழியுநிரைச் சாலையிடை
           நீசர்புகிற் போக்க நூலின்
 ஆற்றுகழு வாயில்லை பலமொழிந்தென்
           றருமமிரண் டாகு மொன்று
 நீற்றனடிப் பூசனையொன் றாவையவ
           னடியாரை நிகழ்த்தும் பூசை.

(இ - ள்.) விடையின்மேல் சுமையேற்றிய தீவினை, சிவபெருமானுக்குப் பதினொரு விடைகளை வழங்கி மேலும் ஓராண்டு ஆனிரையை மேய்த்தலாற் கழியும். ஆன்கொட்டிலில் புலையர் புகுந்தால் அவர்க்கு எய்தும் தீவினைக்கு நூல்களில் கழுவாய் கூறப்படவில்லை. பலபடப் பாரித்துப் பேசுவானேன். இறை அறம் இரண்டு வகைப்படும். அவற்றுள் ஒன்று இறைவன் திருவடிவழிபாடாம். மற்றொன்று மெய்யடியாரையும் ஆன்களையும் வழிபடுதலாம் என்றுணர்க.

(வி - ம்.) ஓராண்டுநிரை போற்றின் கழியும் என மாறுக.

(500)

 ஆதலினால் வறியோரு மாவையவ னடியாரை யமைந்த கொண்டு
 தீதறுபூ சனைவிளைக்க வினைநீறுங் கதிவீறுந் தீண்டா ரேனும்
 நாதனடிக் கன்பினரே லவரைவழி படன்முறையந் நலமி லாரேல்
 மேதகுசா தியரேனும் விடல்விளைத்த பூசைநலன் விளைப்பார் யாரே.

(இ - ள்.) இங்ஙனமாதலின் நல்குரவாளரும் ஆன்களையும் அவ்விறைவன் மெய்யடியாரையும் தம்பாலமைந்த பொருள்கொண்டு தீவினையறுதற்குக் காரணமான வழிபாடு செய்க. இங்ஙனம் வழிபட்டுழித்