தீவினை கெட்டொழியும்; வீடுபேறுமுண்டாம். தீண்டத்தகாத புலையரேனும் இறைவனடிக்கு அன்புடையோர் எனின் அவரையும் வழிபடல் முறையேயாம். இறையன்பாகிய அந்நலமில்லாதோர் மேலான பார்ப்பனரேனும் வழிபாடு செய்யாது விடுக. அவர்க்கு வழிபாடு செய்யின் அதற்குரியன பயன்தருவோர் யாருமிலராகலான் அவ்வழிபாடு வீணாம் என்றுணர்க. (வி - ம்.) அமைந்த - பெயர். வழிபடற்குரியவற்றை வழிபட்டக்கால் அவ்வழிபாட்டினை இறைவனே ஏன்றுகொண்டு அதற்குரிய பயனுமீவான். தகாதவிடத்துச் செய்யும் வழிபாட்டிற்குப் பயன் அளிப்பார் யாருமில்லையாகலான். பூசைநலன் அளிப்பார் யாரே என்றனர். (501) | தேவயாத் திரைதீர்த்த யாத்திரைசெய் | | சிவனேசர் பிரம சாரி | | மேவவறம் வளர்கிரகி வனத்துறைவோ | | ரறத்துறந்த மெய்ம்மை யாளர் | | மாவிரதர் பாசுபதர் சிவதலம்வாழ் | | வோரிறைவன் மலர்த்தாண் மீது | | பாவமைப்போ ரியமியம்ப லாதிபல | | தொழில்வகையிற் பட்டோர்க் கம்மா. |
(இ - ள்.) தலயாத்திரையும் தீர்த்த யாத்திரையும் செய்கின்ற சிவனடியார்க்கும், பிரமசாரிகட்கும், அறம்மிகும்படி வளர்க்கும் இல்லறத்தார்க்கும், வானப்பிரத்தர்க்கும், துவரத்துறந்த மெய்க்காட்சி யாளர்க்கும், மாவிரதர்க்கும், பாசுபதர்க்கும், சிவதலங்களில் வாழும் வறியோர்க்கும், இறைவன் மலரடிமேல் பாவியற்றும் நல்லிசைப் புலவர்க்கும் இறைவன் கோயிலில் இசைக் கருவிகளை வாசிக்கும் கலையினர்க்கும் இன்னோரன்ன பல்வேறு இறைவன் பணியிலே ஈடுபட்டிருப்போர்க்கும். (வி - ம்.) கிரகி - இல்லறத்தான். இயம் - இசைக்கருவி. அம்மா : அசை. (502) | அறுசுவையூண் விசிறிகுடை கழலறுவை | | கனகம்வெள்ளி யாதி வெந்நோய் | | தெறுமருந்து கடங்கரக மாபரண | | முதற்பலவுந் தெரிந்து நல்கும் | | உறுகொடையோ ரவ்வகொடைப் பயன்சிவலோ | | கத்தினுகர்ந் தும்ப ரானோர் | | நறுமுறுப்ப விறல்வேந்தாய்ப் பாரதமாண் | | டிறைவனடி நண்ணு வாரால். |
|