பக்கம் எண் :

630தணிகைப் புராணம்

(வி - ம்.) வேதன் - பிரமன். ஊழின் - முறையாக. சோதி - இறை. பரானந்தம் - உயர்ந்த இன்பம். மாது, ஓ : அசைகள்.

(505)

வேறு

 இல்லறந் துறந்தேற் றுண்டமெய்த் துறவோ
           ரீசனா கமப்பொரு ளுணர்ந்தோர்
 சொல்லிறந் தவனைச் சித்திரைத் திங்க
           டோற்றுநா ணெய்யொடு பிறவும்
 புல்லுற வாட்டிப் பாளித முதலாம்
           போனக மன்பரா யிரவர்க்
 கொல்லுவித் துபய முகத்தன விடையோ
           டாயிர மொருமுதற் களித்தோர்.

(இ - ள்.) இல்லறத்தைத் துறந்து ஊராலொருநாள் கையுறை ஏற்றுண்ட மெய்யான துறவோரும், இறைவனருளிய ஆகமப் பொருளை ஓதியுணர்ந்தோரும், சொல்லைக் கடந்துநின்ற இறைவனைச் சித்திரைத் திங்கள் பிறக்குநாளிலே நெய் முதலிய ஆனைந்துங் கூட்டி ஆட்டி மேலும் அப்புத்தாண்டுப் பிறப்பு நாளிலே அக்கார வடிசில் முதலிய உணவுகளை சிவனடியார் ஆயிரவர்க்கு ஊட்டி, ஈனுநிலையிலுள்ள ஆன்களை விடையோடு இறைவனுக்கு வழங்கினோரும்.

(வி - ம்.) சொல்லிறந்தவன் - இறைவன். புல்லுற - கூட. பாளிதம் - கண்டசருக்கரைச் சோறு; சோறுமாம். போனகம் - உணவு. ஒல்லுவித்தல் - ஈண்டு ஊட்டுதல். உபயமுகத்தன என்றது - முதிர்ந்த கருவுடைய பசுக்கட்குக் குறிப்பு வினையாலணையும் பெயர், ஆனுக்கும் அதன் கருப்பத்துள்ள கன்றுக்குமுரிய முகம் இரண்டாகலின். உபயமுகத்தன எனப்பட்டது. ஒருமுதல் - தனிமுதல்வன்; சிவன்.

(506)

 மெய்யுணர்ந் ததற்குத் தகநட வாது
           மிடைந்தெழும் போகத்தின் கருத்தால்
 கையிழந் தவரென் றிவரெலாங் கலப்பர்
           கவின்றவச் சிவபுரத் தெல்லை
 பொய்யற வொருநா ளுண்மையுன் னினரும்
           பூரணி புரங்கற்ப வயுதம்
 ஐயென வாழ்ந்து நம்முல காதி
           யவனிகா றிழிந்தடி யடைவார்.

(இ - ள்.) மெய்ப்பொருளை ஓதியுணர்ந்திருந்தும் அவ்வுணர்ச்சிக்குப் பொருந்த நடவாது உள்ளத்தின்கண் செறிந்து எழுகின்ற இணைவிழைச்சு முதலிய நுகர்ச்சி நினைவான் நல்லொழுக்கத்தினின்றும் ஒரோ வழி பிழைத்த அடியாரும், என்று கூறப்பட்ட இவரெல்லாம் அழகிய அச்சிவலோகத்தை எய்தாநிற்பர். காமவெகுளி மயக்கங்களாகிய பொய்கள் ஒரோவழிச் சிறிது மடங்கியமையாலே ஒருபொழுது மெய்யுணர்ச்சியை எய்தியவரும், உமையுலகத்தை யடைந்து அங்குப்