| முக்கணிறை பதம்பணிய முன்னியவேண் முதலானோர் | | அக்கணிறு வியமயில்குக் குடமரிதோ னீயிர்தவம் | | எக்கருத்தி னிழைக்கின்றீ ரெனவினாய்ச் சபித்திடலும் | | தக்கவவற் றெழின்முகத்த சாரதங்க ளாயினார். |
(இ - ள்.) முக்கணிறைவன் அடியினை வணங்க அடைந்த முருகக் கடவுள் முதலிய மூவர்களும் அங்கண் நிறுத்திய மயிலும், சேவலும், சிங்கமும், யானையுமாகிய நான்கும் (சூரன் முதலிய நால்வருந்தவமியற்றக் கண்ணுற்று) நீங்கள் எவ்வெண்ணத்தினோடு தவமிழைக்கின்றீரென்று வினவி (தமக்கு அவரால் பின்னர் இடையூறு நிகழுமென்றெண்ணிச் சபிக்க (அக்கணமே யவர்கள்) தகுதிப்பாட்டினையுடைய (மயில், சேவல், சிங்கம், யானையாகிய) அவைகளின் அழகுபொருந்திய முகத்தையுடைய பூதங்களாயினர். (வி - ம்.) முன்னிய - நினைத்த. அங்கண் - விகாரம். முக்கணிறை - சிவன். வேள் - முருகன். குக்குடம் - கோழிச்சேவல். அரி - சிங்கம். தோல் - யானை. சாரதம் - பூதம். (6) | பாரிடராய் விறலண்டா பரணர்பணி புரிகாலைப் | | போரிடைந்து தேவரடைக் கலம்புகுதப் பொருமவுணர் | | வேரறுத்தா ரதுகேட்டு வெய்யவவு ணக்குலத்துச் | | சாருகென வத்தலைவர் தருஞ்சாபந் தாங்கினார். |
(இ - ள்.) (இந்நால்வரும் உடம்பொடு முகங்களொவ்வாத) பூதர்களாய்த் தவத்தின் வலியினையுடைய அண்டாபரண ரென்னும் முனிவர் பக்கலிற் சென்று, குற்றேவல் செய்கின்ற காலத்துப் போரின்கட் டோல்வியுற்றுத் தேவர்கள் யாவரும் சரண்புகுதற் கேதுவாகப் போர்செய்யும் அவுணர்களை வேரறக் களைந்தனர். இச் செயலினைக் கேட்டு அவுணக்குலத் தலைவர் (நீயிர் அவுணராயிருந்தும் அவுணக் குலத்தையே வேரறுக்க முற்பட்டீராதலின்) கொடிய அவுணக் குலத்தின்கண்ணே பொருந்துக வென்று கொடுத்த சாபத்தினை யேற்றனர். (வி - ம்.) சாபமாவது நீங்களும் எங்குலத்திற் பிறந்து தேவர்கட்குப் பகையாகக் கடவீர் என்றது. அண்டாபரணர் - அண்டங்களை யெல்லாம் ஆபரணமாகக் கொண்ட ஒரு முனிவர். சாருக, என : விகாரம். (7) | மற்றுமொரு நாட்செவ்வேண் மதிமிலைத்த பொலஞ்சடிலக் | | கொற்றவனைத் தொழவூர்தி கொடிப்பறவை புறநிறீஇ | | உற்றனன்மான் முதலோரு மூர்திநிறுத் துள்ளடைந்தார் | | வெற்றிமயிற் சேவலைத்தாழ்ந் திலவிண்ணோர் விறலூர்தி. |
(இ - ள்.) வேறொருநாள் முருகக் கடவுள் மதியினை யணிந்த பொன்மயமான சடையினையுடைய வென்றியுடையவனாகிய சிவபெருமானை வணங்க ஊர்தியாகிய மயிலினையும், கொடியாகிய கோழிச் |