பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்641

வற்றை நீக்கி) உண்மைப்பொருளை உணர்த்தித் தூய்மையைத் தருதற்கேதுவாய யோகத்தின்கண்ணே தங்கலினால்.

(வி - ம்.) உடங்கு - ஒருசேர. தவிர்ந்து - தங்கி. இகந்த - இகழ்ந்த. நீக்கிய - நீக்க.

(15)

 செவ்வி பெற்றிலன் மீண்டு மன்னசி லம்பை யண்மின னோற்றுழி
 அவ்வி யந்தபு மன்ப ருக்கருள் செய்ய வாங்கணெ ழுந்தருள்
 ஒவ்வ ரும்பர னும்ப ரோடு முனக்கு நன்மை பெருக்கிநும்
 மெவ்வ மோப்புமொ ரேந்த லைத்தரு கென்று போக மகிழ்ந்தனன்.

(இ - ள்.) இறைவனைக் காண்டற்குக் காலம் பெற்றிலனாய் மீளவும் அம்மேருமலை அண்மித் தவஞ்செய்யும் ஞான்று பிறராக்கங் கண்டுழியெழும் பொறாமையாகிய குணம் நீங்கிய அடியார்க்கருளும் வண்ணம் எழுந்தருளும் ஒப்பிலனாகிய சிவபெருமான் தேவர்களோடு கூட உனக்கு நன்மையை மிகச்செய்து நுங்களுடைய துன்பினை யோட்டும் ஒப்பற்ற தலைவனைத் தருவேன் என்று திருவாய்மலர்ந்தருளி யெழுந்தருள இந்திரன் மகிழ்ச்சியுற்றனன்.

(வி - ம்.) செவ்வி - காலம். அன்ன சிலம்பை - அத்தன்மைத்தாகிய மேருமலையை. அவ்வியம் - பொறாமை. எவ்வம் - துன்பம். தருகு - தருவேன்: தன்மை யொருமை வினைமுற்று. என்று சொல்லிச் செல்ல இந்திரன்
மகிழ்ச்சியுற்றனன்.           2

(16)

 எந்தை யோகினி ருந்த னனிம யத்தி லன்னை யிருந்தனள்
 மைந்த னைத்தர லென்றெ னக்கம லத்தன் மாட்டித றைந்தனன்
 தந்தை தாய்பிரி யத்த ணந்தபு ணர்ச்சி யாற்றளர் வேதனும்
 அந்தின் மாயனை யண்மி யாய்ந்தலர் வாளி யான்றனை யேயினான்.

(இ - ள்.) எந் தந்தையாகிய சிவபெருமான் யோகத்தின்கண்ணே தங்கினான்; இமயமலையின்கண்ணே அன்னையாகிய உமையம்மை இருந்தனள்; (என்றுன்பினை யோட்ட) புத்திரனைத் தருதலெக்கால மென்று தாமரைப் பூவின்கணெழுந்தருளியிருக்கும் பிரமனிடத்தில் இதனைச் சொன்னான். அம்மையப்பர் (இணைவிழைச்சின்றிப்) பிரிதலால் நீங்கிய விழைச்சினால் வருந்துகின்ற வேதத்தையுணர்ந்த பிரமனும் திருமாலினையண்மி (இணைவிழைச்சு நிகழ்தற்குரிய காரணங்களை) ஆராய்ந்து பூவம் பினையுடைய மன்மதனை (இறைவன்மாட்டுச்)
செலுத்தினான்.

(வி - ம்.) அம்மையப்பர் இணைவிழைச்சின்றி யிருப்பின் உலகின்கண் இணைவிழைச்சு நிகழாதென்பார். "தணந்த புணர்ச்சியாற்றளர் வேதனும்" என்றார். இதனைத் "தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற்றம்பலவன், பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடி, பெண்பா லுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர், விண்பாலி யோகெய்தி வீடுவர் காண் சாழலோ" என்னுந் திருவாசகத்தா னுணர்க. தணந்த புணர்ச்சி - நீங்கிய புணர்ச்சி. அஃதாவது புணர்ச்சியில்லாமை.

(17)