பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்643

கந்தர்கலிவெண்பாவா னுணர்க. இதனாற் சிவபெருமானுக்கும் அறுமுகமுளவாதல் காண்க. ஞெமிர்ந்தன - பரந்தன. இதனை, 'பாய்தலும் ஞெமிர்தலும் பரத்தற் பொருள' என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. சுலாவல் - சுழலல்.

(20)

 முன்ன ரண்மநி னைந்த டுத்தபின் முக்க ணாயக னல்கலும்
 அன்ன வொண்சுடர் கால்சு மந்தழ லுய்ப்ப வத்தழல் கங்கைநீர்
 தன்னி லுய்ப்பவி ரைந்து கங்கைத குஞ்ச ரவண முய்த்தலும்
 என்னை யாள்கும ரன்ம கிழ்ந்தறு மாதர் பாலுண்டி ருந்தனன்.

(இ - ள்.) மூன்று கண்களையுடைய சிவபெருமான் (அச்சுடர்கள்) தன் முன்னர்வரும் வண்ணம் நினைக்க வந்தபின்னர் அவ்வொள்ளிய தீப்பொறிகளைக் கொடுத்த வளவில் காற்றுத்தேவன் சுமந்து அக்கினியின்கட் கொடுப்ப அவ்வங்கியங் கடவுள் கங்கையின்கட் செலுத்தக் கங்கை நதியானது தகுதியமைந்த சரவணப் பொய்கையிற் சேர்க்க என்னை யடிமைகொண்ட முருகப்பெருமான் மகிழ்ச்சியுற்றுக் கார்த்திகைப் பெண்கள் மாட்டுப் பாலுண்டு எழுந்தருளியிருந்தனன்.

(வி - ம்.) நினைந்து - நினைக்க : எச்சத்திரிபு. கால் - காற்று. அறு மாதர் - கார்த்திகை மகளிர்.

(21)

 சிலம்ப ரொன்றனொ டொன்று தாக்குபு சேர்ம ணித்திரள் சிந்துற
 அலம்பு மேகலை யன்னை யக்கன லஞ்சி யோடிய றிந்துபின்
 நலம்ப டுங்கருத் தேவர் மாதர்நண் ணற்கவென்றுந வின்றுசென்
 றிலம்ப கங்கழ லொன்ற வீழ்ந்திறை பாக மொன்றியி ருந்தனள்.

(இ - ள்.) ஒலிக்கின்ற மேகலையையணிந்த உமையம்மையார் அவ் வங்கிக்குப் பயந்து காலணி யொன்றோடொன்று மோதுதலால் (அம் மேகலையின்கட்) சேர்ந்த இரத்தினக் கற்கள் சிந்துவண்ணம் ஓடி நம்பாற் குமரன் றோன்றாவண்ணம் தேவர்கள் செய்த சூழ்ச்சியால் இங்ஙனமாயதெனத் தேவர்கண் மாட்டுச் சீற்றங்கொண்டு நன்மை யுண்டாவதற் கேதுவாகிய கருப்பத்தைத் தெய்வமங்கையர் அடையற்க வென்று சாபமிட்டுச்சென்று தலைக்கோலமானது திருவடியின்கண்ணே பொருந்த வணங்கி இறைவன் பாகத்தின்கண்ணே பொருந்தி யிருந்தன ளென்க.

(வி - ம்.) இலம்பகம் - தலைக்கோலம். இதனை "அரங்கணி நாடக மகளி ராய்நுதற், சுரும்புசூ ழிலம்பகத் தோற்றம் ஒத்ததே" என்னும் சிந்தாமணி - கேமசரி இலம்பகம் 31ஆவது செய்யுளடியானு முரையானு முணர்க.

(22)

 ஆங்க சைந்தொளி ருங்க லொன்பது மன்னை தன்னுருத் தோற்றின
 ஈங்கு வம்மினெ னும்பி ரானெதி ரேந்து கொங்கைய ராய்விழைந்
 தோங்கி ருங்கரு வெய்த நோக்கியு றுங்க ருப்பெற லென்றுமை
 தாங்கு வெப்பினு ரைப்ப வத்தகு தைய லார்வெயர்த் தாரரோ.