(இ - ள்.) அசைவுற்று ஒளிர்கின்ற கற்க ளொன்பதின்மட்டும் உமையம்மையார் திருவுருவந் தோன்றின. இங்கு வம்மின் என்னும் இறைவன் எதிரே கொங்கையினைத் தாங்கிய பெண்களாகி விருப்புற்று (நோக்கி) உயர்ந்த பெருஞ் சூலினைக்கொள்ள உமையம்மையார் (சூலுற்றமையை) நோக்கிப் பொருந்திய கருவுயிராதிருக்க வென்று தாங்கொண்ட சீற்றத்தா னுரைப்ப அப்பெண்கள் ஒன்பதின்மரும் வெயர்த்தா ரென்க. (வி - ம்.) வம்மின் என்னும் பிரானெதிர் கொங்கையராய் ஒன்பதின்மரும் விழைந்து பார்த்தலாற் கருவுற்றா ரென்க. உமையம்மையார் நோக்கி கருப்பெறலென்று வெப்பினுரைக்க வென்க. பெறல் - அல்லீற்று வியங்கோள். வெப்பு - சீற்றம். ஆங்கு : அசை. (23) | இலக்கர் வேரினு தித்த னர்சில வைக லேகலு மன்னவர் | | நலக்க வந்தனை செய்தி ரப்பந யந்த பார்ப்பதி யேவலால் | | குலக்க ணம்புக ழொன்ப தின்மருங் குக்கி நீங்கின ரீசனார் | | இலக்க ரோடிளையோனை நீங்கலி ரென்ற வர்க்கரு ளேய்த்தபின். |
(இ - ள்.) அவ் வொன்பதின்மரின் வேர்நீரின் இலக்கரென்பார் தோன்றினர். சின்னாட்கள் சென்ற அளவின் அவ் வொன்பதின்மரும் நன்மை பொருந்த உமையம்மையாருக்கு வழிபாடுசெய்து இரவாநிற்ப (அவ் வழிபாட்டில்) விழைவு கொண்ட அம்மலையரசன் மகளின் கட்டளையான் சிறந்த சிவகணங்களாற் புகழப்பெற்ற வீரவாகுவை முதலாகக்கொண்ட ஒன்பதின்மராகிய வீரரும் வயிற்றினின்றும் நீங்கினார்கள். அவ்வொன்பதின்மருக்கும் இலக்கரோடு இளையோனாகிய முருகனை நீவிர் நீங்காதிருக்கக் கடவீரென்று அருள் செய்தபின்னர். (வி - ம்.) குலக்கணம் - சிறந்த சிவகணம். குக்கி - வயிறு. குக்ஷி என்ற வடமொழித் திரிவு. ஏவலான் ஒன்பதின்மருங் குக்கி நீங்கினரென்க. (24) | பல்லி யங்களி யம்ப யாரும்ப டர்ந்து சூழ்தர மாதொடும் | | அல்லி மென்மலர் செற்று பொய்கைய டுத்து மைந்தரை யிவ்வயின் | | வல்லை நீகொணர் கென்ற னர்மலை யான்ம டந்தைம கிழ்ந்துறீஇப் | | புல்லி யோருருச் செய்து கொங்கைபொ ழிந்த தீம்பய மூட்டினாள். |
(இ - ள்.) பல வாத்தியங்களும் முழங்கப் பிரமன் முதலிய யாவரும் பரந்துசூழ உமையம்மையாரோடு அகவிதழோடு கூடிய மெல்லியமலர்கள் செறிந்த சரவணப்பொய்கையை யண்மிக் குழவிகளை இவ்வயின் நீ விரைவிற் கொண்டுவருக என்று திருவாய்மலர்ந்தருளினார். மலையரையன் புதல்வி மகிழ்வுற்றுப் பொருந்தி (அக்குழவிகளை)த் தழுவி ஓருருவாகச் செய்து கொங்கையினின்றும் சொரிந்த இனிய பாலினை யூட்டினா ளென்க. (வி - ம்.) செற்று - செறிந்த. ஓருருச் செய்தல் - (ஆறு வடிவாக விருந்த குழவிகளை) ஓருருவாகச் செய்தல். நீயென்றது அம்மையாரை. பயம் - பால். (25) |