ஒன்பதின்மரும், வன்மைபொருந்திய வீரரிலக்கரும், ஏனையோரும் பொருந்த மதிற்கோட்டையா மென்று சொல்லும் வண்ணம் கனத்துப் பருத்த தேரின்கட் பொருந்தினானென்க. (வி - ம்.) தான் : அசை. மரீஇ - என்னும் செய்தென் னெச்சத்தைச் செயவென் னெச்சமாகத் திரிக்க. ஒன்பதின்மரும் - உம்மை விகாரத்தாற் றொக்கது. (37) | தங்கட் கிறைவன் றுயருந் தவிர | | இங்குற் றனனென் றெழுமோ கையினாற் | | பொங்கிக் கடலார்ப் பொடுபுக் கதென | | அங்கட் டிரள்பல் லியமார்த் தனவே. |
(இ - ள்.) கடல் தங்கட்கிறைவனாகிய வருணன் (மாட்டுள்ள துன்பமு நீங்க) பெருமான் இங்குப் பொருந்தினா னென்று கருதியதனாலுளவாகிய களிப்பால் பெருக்கெடுத்து ஒலியோடு புகுந்ததென்று சொல்லும்படி அழகிய கண்ணிடத்தையுடைய பல வாத்தியங்கள் ஒலித்தன வென்க. (வி - ம்.) இனி அங்கண் திரள் பல்லியம் - அவ்விடத்துப் பல வாச்சியங்கள் எனவும் பொருள் கொள்க. இறைவன் - கடற்றலைவனாகிய வருணன். (38) | வறங்கூர்ந் துமையாந் தனிர்வண் மைதழீஇத் | | திறங்கூ ருதிரென் றுகையாற் செறிவிண் | | நிறங்கூ ருலகின் வெரிநீ வுதல்போல் | | அறங்கூர் கொடியெங் குமசைந் தனவே. |
(இ - ள்.) விண்ணுலகத்தாரே! நீவிர் வற்கடம் அடைந்து மயங்கினீர் : இனி வளப்பமெய்தி முன்னை நிலையினும் மிக்கீராவீர். எம்பெருமான் அமரர் படைத்தலைவனானான் ஆதலால் என்று கூறி நெருங்கிய ஒளி மிக்க விண்ணுலகத்தின் முதுகினைத் தடவுதல் போல உலகினுக்கு அறத்தினை அறிவிக்கும் தேரிற் கட்டிய கொடிகள் மேல் எங்கும் அசைந்தன வென்க. (வி - ம்.) வறம் - வற்கடம். மையாத்தல் - மயங்கல். வெரிந் - முதுகு. (39) | மண்டே ருருளா கியநா மனமாம் | | திண்டே ருருள்வல் லமெனத் திகழூர் | | கொண்டேர் மதியங் குடையா னதென | | ஒண்டேர்க் குடையோங் கிநிழற் றியதே. |
(இ - ள்.) பரிவேடங் கொண்டு அழகுவாய்ந்த மதியமானது முப்புரமெரித்த காலத்து நிலமாகிய தேரினுக்கு உருளாகிய நாம் முருகப்பெருமான் ஏறும் மனோரதம் என்னும் பெயரினையுடைய வலிய இத்தேரின் உருளாதற்கு வல்லமை யுடையோமல்லேம் எனக் கருதிக் |