பக்கம் எண் :

650தணிகைப் புராணம்

குடையானதென்று சொல்லும்படி ஒளிபொருந்திய தேரின்கண் வெண்கொற்றக் குடையுயர்ந்து நிழலைச் செய்த தென்க.

(வி - ம்.) மண்டேர் - நிலமாகிய தேர். உருள் - சக்கரம். ஊர் - பரிவேடம்.

(40)

 அக்கங் கைசுமந் தருள்பெற் றதுகேட்
 டுக்கண் விசும்போ ரிருகங் கையுமுன்
 புக்குத் தொழுகின் றதுபோ லுமெனத்
 தொக்குத் திவள்சா மரைதுள் ளினவே.

(இ - ள்.) நிலத்தின் கண்ணிருந்த அக்கங்கையாறு (முருகனைச்) சுமந்து அவன் அருளினை யடைந்ததைக் கேள்வியுற்று வானாகிய உவ்விடத்திலுள்ள ஒப்பற்ற இரண்டு கங்கையாறும் (அவனுக்கு) முன்னர் புகுந்து தொழுவதை யொக்குமென்று சொல்லும்படி நெருங்கி விளங்குகின்ற சாமரங்கள் (அவன் இருபக்கத்திலும்) அசைந்தன வென்க.

(வி - ம்.) உங்கண் - எதுகை நோக்கி வலித்து நின்றது. இந்திரலோகம் பிரமலோகம், சிவலோகமாகிய மூன்றினுள்ளும் மூன்று கங்கையுண்டு. அவற்று ளொன்று நிலத்தின் கண்ணிழிந்தது, அக்கங்கையென்றது நிலத்தினிழிந்த கங்கையை யென்க.

(41)

 இளையோ னலனென் றுதெரிப் பனபோல்
 முளையா முதல்வன் குரவன் பிரமற்
 றளையார்த் தவன்சண் முகனென் றிசைகா
 களமோ டுசின்னங் கள்கறங் கினவே.

(இ - ள்.) பிறவாயாக்கைப் பெரியோனுக்கு ஆசாரியன் எனவும், பிரமனைச் சிறையிற் கட்டுண்ணச் செய்தவன் எனவும், அறுமுகத்தையுடையான் எனவும் சொல்லப்படுகின்ற இவன் தானவர்களே நீங்கள் கருதும் வண்ணம் இளமைத்தன்மை யுடையோனல்லன் என்று தெரிவிப்பனபோன்று ஒலித்தலைச் செய்கின்ற காகளம் என்னும் வாத்தியத்தினோடு வெற்றிக்குறி குறிக்குஞ் சின்னமென்னும் வாச்சிய முழங்கின வென்க.

(வி - ம்.) முளையாமுதல்வன் - பிறவாயாக்கைப் பெரியோன், சிவன். குரவன் - ஆசிரியன். சின்னம் - ஒரு துளைக்கருவி.

(42)

 விழையத் தகுவீ ரலிரென் றுவிணோர்
 உழைநற் புகழைத் திரள்செய் துணவாய்
 முழைவைப் பமுயன் றவையோ லிடல்போற்
 றழையப் பலசங் கமுரன் றனவே.

(இ - ள்.) (தேவர்களே) நீங்கள் புகழை விரும்புந்தகைமை யுடையீரல்லீர் என்றுகூறி அத்தேவர்கண் மாட்டுள்ள நல்லபுகழைத் திரட்டியுண்ண வாயாகிய குகையில் வைக்க முயறலால் (அங்ஙன முயறலைக் கருதிய அப்புகழ்கள் ஓலமிடுதல்போலப் பேரொலியுண்டாகப் பல சங்கங்கள் முழங்கின வென்க.