பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்651

(வி - ம்.) விணோர் - விண்ணோர். ஓலிடல் - முழங்குதல். முயன்று என்னும் செய்தென்னெச்சங் காரணப் பொருட்டு.

(43)

 காலா தியின்வன் பகைகாய்ந் துசமர்
 ஏலா மைதமக் கருளீ சன்மகன்
 கோலா தியினா டல்குறித் தமைதேர்ந்
 தாலா நடமா டினபா ரிடமே.

(இ - ள்.) காலன் முதலியவர்களால் (பூதர்களாகிய தங்களுக்குளவாகிய) வலிய பகையினைக் கெடுத்துப் போரினை (அக்காலன் முதலியோரோடு) பொருந்தாமையைச் செய்த இறைவன் றிருமகன் அம்பு முதலியவைகளால் போர் குறித்தலை ஆய்ந்தறிந்து பூதங்கள் முழங்கி நடமாடின வென்க.

(வி - ம்.) கால் - இயமன். "கனமயில் கால்மறல் மடங்கல் காலன் பாசத்தானும்பேர்" என்னும் நிகண்டானறிக. கோல் - அம்பு. ஆலா - முழங்கி. இதனை 'ஆலலாட லொலிப்பேர்' என்னும் நிகண்டானறிக.

பூதர்கள் முன்னைச் செய்த தவப் பேற்றான் இறைவன் பக்கலணுகியவன் பொருள் சேர்புகழை யெப்பொழுதும் புரிதலின் அவர்களுக்குத் தென்றிசைக் கிறைவனாலுளதாந் துன்பின்றி யென்றும் ஒருபெற்றித்தாகிய இன்பினை இறைவனருளினமையின் அவ்வியமனோடு அவர்க்குப் போரின் றென்பார்,

"காலாதி யின்வன்பகை காய்ந்துசம ரேலாமை தமக்கரு ளீசன்" என்றார் என்க.

(44)

 இக்கா ளையையேந் தெறுழ்முன் பெறலால்
 தக்கா னெனமான் மொழியத் தழையாக்
 கைக்கால் வடிகோல் கொடுகா மருதேர்
 அக்கா லிறையை யெனவூர்ந் தனனே.

(இ - ள்.) திருமால், இக்காளைப் பருவத்தையுடைய முருகனைச் சுமக்கும் வன்மையை முன்னரே பெற்றிருத்தலான் (இக்காற்றுத் தேவனே) தகுதியுள்ளானென்று கூற உள்ளந்தழைத்து அக்காலிறைவன் கையின்கண் தாற்றுக் கோலினைக் கொண்டு தேரினை அழகாகச் செலுத்தினா னென்க.

(வி - ம்.) முன்னர்க் காற்று இவனைத் தாங்கிச் சரவணத்தின்கண் ணுய்த்தனன். கைக்கால் - கையிடம். வடிகோல் - தாற்றுக்கோல். காலிறை - காற்றாகிய கடவுள். ஐ - அழகு.

(45)

 கடலும் புவியுங் கதிர்வா னகமும்
 படர்வா யிடவே றுபௌவங் கிளரா
 வடவா முகத்தின் வழிக்கொண் டதென
 மிடைபூ தரினாப் பண்விரைந் ததுதேர்.