(இ - ள்.) மிக்க தவத்தினையுடைய நாரதன், ஈன்ற தாய் வேறெவருமின்றித் தந்தையின் அழற்கண்ணே யாகுமென்று கூறத்தகுந் தலைவனே! மேற்கூறிய கொடுந்தன்மை இயைந்த தாரகன் இனிய உயிரைக் குடித்தல்லாமல் தேவர் முதலியோருக்கு இடுக்கண் செய்யும் அத்தன்மை வாய்ந்த சூரன் அரிய உயிரினைக் குடித்தற்குச் சேறற்க வென்று கூற. (வி - ம்.) இம் முருகன் அன்னை கருப்பத்தூறிப் பிறவானென்பார், "அன்னை தந்தை அழற்கண் எனத்தகும்" என்றார். இதனால் அழற்கண்ணினுளவாகிய பொறியே முருகனாதல் தெளிக. (52) | தார கத்துரு வாகிய தத்துவன் | | பார கத்துயிர் வாட்டும் பதகனித் | | தார கப்பெயர் தாங்கற காதெனப் | | போர கத்துமு டிப்பது பூண்டனன். |
(இ - ள்.) தாரகமென்னும் மந்திரத்தினையே திருவுருவாகக் கொண்ட என்றும் உண்மைப் பொருளாகிய முருகன். நிலவுலகின்கண்ணுள்ள உயிர்களை (இரக்கஞ் சிறிதுமின்றி) வருத்துகின்ற பதகனாகிய இவன், தாரகன் என்னும் பெயரினை மேற்கோடல் (சிறிதும்) அடாதென்று கருதி போரின்கண் அவனைக் கோறலை மேற்கொண்டனன். (வி - ம்.) தாரகம் - ஒரு மந்திரம். அனுபவமுடைய தேசிகர் பாற் கேட்டுத் தெளிக. தத்துவம் - உண்மை. (53) வேறு | வீர வாகுவை நோக்கி யாயிர வெள்ள மாகிய பூதரும் | | போர வாவுமி லக்க ரும்புக ழெண்ம ரும்புடை கொண்டுபோய் | | ஆர வாடமர் செய்க வென்றருள் செய்து வான்யவ னன்றனைத் | | தேரனோர்க்குத வப்ப ணித்தனன் செய்த ளித்தன னொல்லையில். |
(இ - ள்.) வீரவாகு தேவரை, (முருகப்பெருமான்) திருக்கடைக் கண்சாத்தி, ஆயிரம் வெள்ளம் பூதப்படைகளையும், (எஞ்ஞான்றும்) போரெனிற் புகலும் இலக்க வீரரையும், (வீரவாகுவை ஒழித்த) ஏனை எண்மருமாகிய இவர்களையும் அந்நகரின் பக்கலிற் கொண்டு சென்று வென்றியுளவாகப் போரினைச் செய்க என்றருளிச்செய்து, தெய்வத்தச்சனை அழைத்து, அவ்வீரர்க்குத் தேரினை யியற்றித் தருகவெனக் கட்டளை யிட்டனன், அத்தச்சன் விரைவிற் றேரினை இயற்றிக் கொடுத்தனன். (வி - ம்.) ஆடல் - வென்றி. வான்யவனன் - அந்தரத்தார்மயன். ஒல்லை - விரைவு. நகர் - மாயாபுரி. (54) | இறகெ ழுந்துப றக்கு மோங்க லெனச்செஃ றேர்பல சூழ்தரப் | | பொறைநி லக்கரி தாமெ றுழ்ப்பொரு பூதர் தேர்ப்படை சூழமண் | | நெறுநெ றென்றுநெ ளிக்க நீளிர தங்க டாய்விறல் வாகுவும் | | முறைதி றம்பிய தறுக ணான்றவிர் மூரி மாநகர் முற்றினான். |
|