(இ - ள்.) சிறை தோன்றிப் பறக்கும் மலையெனும்படி செல்கின்ற பல தேர்கள்சூழ, நிலத்திற்கும் பொறுத்தலருமையாகும் வன்மையோடு பொருகின்ற பூதர்கள் தேர்ப்படையுஞ் சூழ, வென்றியுடைய வீரவாகு, நிலமும் "நெறு நெறு" வென்று நிலைகுலைந்து நெளிய, உயர்ந்த தேரினைச் செலுத்தி நீதியினின்று மாறுபட்ட அஞ்சாமையினையுடைய, தாரகன் தங்கிய அரண்வலி யுடைய பெரிய மாயை என்னும் நகரினை முற்றுகை செய்தனன் என்க. (வி - ம்.) நிலக்கு - விகாரம். தவிர்தல் - தங்குதல். (55) | உருகி நெஞ்சழி யத்த மக்கிறை யோனை முன்பணி சீற்றமிக் | | குருவ வன்கட லேழு மோங்கியொ ருங்க டப்புவி முற்றியாங் | | குருளு மாழிய வங்க மாகவொ லித்து முற்றிய சேனையின் | | உருமு முட்கவெ ழுந்த வார்ப்புல கேழு முட்டிநி மிர்ந்ததே. |
(இ - ள்.) கண்டார்க்கு அச்சத்தை உளவாக்கும் ஏழு கடலும் பெருக்கெடுத்து நெஞ்சமுருகி வருந்தத் தமக்கு இறைவனாகிய வருணனை முன்னர் ஏவல் கோடலாலுளவாகிய சீற்ற மிகுதலால், கிரவுஞ்சமலை முதலியவற்றை ஒருசேர வருத்த, நிலவுலகின்கண் வளைந்ததையொப்ப உருளுகின்ற சக்கரங்களையுடைய தேர்கள் மரக்கலங்களாகப் போர் முழக்கஞ்செய்து சூழ்ந்த படையாகிய கடலின்கண் இடியேறு வருந்த எழுந்த அரவம் உலகேழினும் நிறைந்து வானளவும் நிமிர்ந்த தென்க. (வி - ம்.) 'உரும்' என்னும் உரிச்சொல் திரிந்து நின்றது. அ : சாரியை. ஆழிய - அன்பெறாத பலவறி சொல். உரும் - இடி. (56) | இன்று வையக மூன்றும் வச்சிர மேந்தி னாற்கரு ளாழியான் | | நன்ற ளித்தன னென்று தேவர் நயப்ப முற்றிய சேனைகள் | | ஒன்று தண்டையும் வேண்டு மேயென வொய்யெ னெப்பிறக் கிட்டுமேல் | | துன்றி யும்புரி சைக்கண் வீரர்கள் சோடை யாற்படை தொட்டிலார். |
(இ - ள்.) அருட்கடலாகிய முருகன் இற்றைப் பொழுதின்கண்ணே, மூன்றுலகினையும், வச்சிரப்படை யுடைய இந்திரனுக்கு நன்மையுளதாகக் கொடுத்தனனென்று, தேவர்கள் விரும்ப வளைந்த படைகள் (தங்களைப் பாதுகாத்தற்கரணாக) பொருந்திய பச்சை சீவாது போர்த்த பரிசைப்படையும், வேண்டுமோ வேண்டுவதின்றென்று கண்டோர் கழறுமாறு விரைவாகப் பின்னிட்டு, மதிற்கண்ணே பாய்தலைக் கண்டு வைத்தும் அகத்தோர் அயர்வினாற்படை தொட்டிலரென்க. (வி - ம்.) திணை - உழிஞை. முன்னைய அடிகளிரண்டும் 'தொல்லெயிற்கிவர்த' லென்னும் துறைக்கினம். தோல் - கேடகம். இப்படையின்மேற் றோலைப் போர்த்துத் தைத்தலின், தோல் என்னும் பெயர்பெற்றது. பச்சை - தோல். தண்டை - தோல், இதனை, "இருசுட ரியங்காப் பெருமூ திலங்கை, நெடுந்தே ரிராமன் கடந்த ஞான்றை, வெண்குடை மிடைந்த பைங்கட் சேனையில், பச்சை போர்த்த பல்புறத் தண்டை, எச்சார் மருங்கினும் எயிற்புறத் திறுத்தலிற், கடல்சூ ழரணம் போன்ற, துடல்சின வேந்தன் முற்றிய ஊரே" என்னும் ஆசிரிய |