பக்கம் எண் :

656தணிகைப் புராணம்

மாலையா னுணர்க. பிறக்கிட்டு - பின்னிட்டு, மேற்றுன்னுதல் - மதில்மேற் பாய்தல். சோடை - மனச்சோர்வு. வீரர்கட்குச் சோர்வுளதாதற்குக் காரணமென்னையெனின், பகைவர் முற்றுகை செய்தலையறிந்து முன்னரே போர்க்கோலங் கொள்ளாது வாளாவிருந்தமையே யாமென்க. 'தண்டை' என்பதை வழி எனக் கூறுவாருமுளர். அவர் துறையோடு பொருத்த மின்மை நோக்கார். உழிஞைத்திணையாவது :- "முழுமுதலரண முற்றலுங் கோடலு, மனைநெறி மரபிற்றாகு மென்ப" என்பர் தொல்காப்பியர்.

 "முடிமிசை யுழிஞை சூடி ஒன்னார்
           கொடிநுடங்கா ரெயில் கொளக்கரு தின்று"

என்பர் ஐயனாரிதனார். தோலின் பெருக்கம் - மதிலகத்தோர் எய்யும் அம்புமாரியை விலக்குதற்கு மதிற்மேற் சென்றுழிக் கிடுகும், கேடகமும், கொண்டு சேறல்.

(57)

வேறு

 பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவுஞ்சென் றெறிகிற்கும்
 முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப் பகழிவா யிலிற்றூக்கி
 எந்தி ரம்பல வுஞ்செறித் தவுணர்தம் யவனன்செ யெயில்வாய்ந்தும்
 அந்தில் வீரர்கள் பூக்கொடண் ணுமைநனி யதிர்தொறு மயிர்க்கின்றார்.

(இ - ள்.) வலியினையுடைய வீரர் ஏறவிடனின்றிப் பந்தும், பாவையும் அழகிய கோலத்தினையுடைய சுளகுமாகிய பலவகை விளையாட்டுக் கருவிகளையும், ஆடல், புடைத்தல் முதலிய தொழிலியற்றும்படி முதற் றடையின்கண் பகை மன்னரை மகளிர் கோலங்கொள விருத்திப் புறவாயிலின்கண் மிகுந்த அம்புகளை நாலும்படிவிட்டு, நூற்றுவரைக் கொல்லி முதலிய இயந்திரங்கள் பலவுஞ் செறிய அசுரத் தச்சன் செய்த மதில் (நிலைகுலையாமல்) பொருந்தி யிருக்கப்பெற்று, அம்மதிலின்கண் பூதவீரர்கள் அரணினை முற்றி உழிஞைப்பூவைச் சூடுங் கால், மிக்கு முழங்கு மத்தளவோசையைக் கேட்குந்தோறும் பந்து பகழி முதலியன விருந்தாங்கிருப்ப நொச்சியின்க ணிவர்ந்து உழிஞை சூடுதல் யாங்ஙன மியையுமென ஐயங்கொள்ளலாயினர்.

(வி - ம்.) பாவை - பதுமை. வரி - கோலம். புட்டில் - சுளகு. மாதர் அரையரை மாதர் கோலங் கொள்ளும்வண்ணஞ் செய்து வைத்தல். எறிதல் - பந்தையடித்தல். பாவையைக் கொண்டாடல், சுளகைப் புடைத்தலாகக் கொள்க. முந்தைவாயில் - முன்வாயில், பின்றைவாயில் - பின்வாயில். அவுணர்யவனன் - அசுரத்தச்சன். யந்திரம் - ஈண்டு மதிற்கணுள்ள பொறி. அந்தில் - அவ்விடம். உழிஞையார் முற்றுகை யிட்டு முதல் வாயிலுள்ள பந்து முதலியவற்றை அறுத்துப் பின்றை வாயிலிலுள்ள அம்பு முதலியவற்றையுங் கைக்கொண்டு மதிற்பொறிகளை நூறிய பின்னரே பூச்சூடுந் தண்ணுமை யொலித்தல் வழக்காறாகலின் அங்ஙனமின்றிப் பூதவீரர்கள் நொச்சியிற்றாவி, உழிஞைப் பூச்சூடுந் தண்ணுமை யொலிகேட்டு இறும்பூது கொண்டு ஐயமுறலால் எயில் வாய்ந்தும், "அந்தில் வீரர்பூக்கொ டண்ணுமை நனியதிர்தோறும் அயிர்க்கின்றார்" என்றார். இதனை,