பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்657

 "மறனுடை மறவர்க் கேற விடனின்றி
  நெய்யோ டையவி யப்பி யெவ்வாயும்
  எந்திரப் பாவையி னியற்றின நிறீஇக்
  கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும்
  வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப்
  பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
  என்றிவை பலவுஞ் சென்று சென்றெறியு
  முந்தை மாதரை யியற்றிப் பின்றை
  யெய்பெ ரும்பகழி வாயிற் றூக்கிச்
  சுட்டல் போயின் றாயினும் வட்டத்
  தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
  நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும்
  தாக்கருந் தானை யிரும்பொறை
  பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே"

என்னும் பொன்முடியார் பாட்டா னறிக. இதுவும், தொல்லெயிற்கிவர்தல். இதனாற் பூச்சூடுதலுங் கூறினார்.

(58)

 குருகு சுட்டிய குன்றெனக் கைதவங் குயிற்றரு மிளைகானம்
 அருகு முற்றிய கிடங்குயர் மதிலழித் தவுணரா விகண்முற்றும்
 பருகி னல்லது குமரவே டிருமுன்னர்ப் படர்கல மெனச்சீறி
 ஒருக ணத்திலா ழகழிதூர்த் தெயிற்பொறி யுதைத்துருட் டினர்சூழ்ந்தோர்.

(இ - ள்.) கிரவுஞ்சமென்னும் பறவையின் பெயரினைக் கருதிய மலையென்று கூற வஞ்சனை பலவும் வாய்க்கக் குயிற்றிய அரணாகிய காடானது பக்கலிற் பொருந்திய அகழியினையும் உயரிய மதிலினையுங் கெடுத்து அவுணர் களாவி முற்றிலுங் குடித்தல்லாமல் குமரவேளின்றிருமுன்னர் யாங்கள் செல்லேமென வெகுண்டு ஒரு கணத்தின்கண் ஆழ்ந்த அகழியைத் தூர்த்து மதிற்கண்ணுள்ள பொறிகளைக் காலாலுதைத்து முற்றிய வீரர் உருட்டின ரென்க.

(வி - ம்.) குருகு சுட்டிய குன்றம் - கிரவுஞ்சமென்னும் பெயரினை யுடைய மலை. இதனைக் "குருகு பெயரிய குன்றெறிந்தானும்" என்னும் வெண்பாமாலை யடியா னுணர்க. மிளைகானம் - இருபெயரொட்டு. திணை - உழிஞை. துறை - தொல்லெயிற் கிவர்தல். இவர்தலாவது ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுள் அழித்து மென்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தல்.

(59)

வேறு

 அழுவப்புன லமரேற்றவ ரகழோடற மதிலில்
 குழுமிப்பெரி தமராடினர் பொறியோடுயிர் குலைய
 எழுமுற்றிய கதவட்டன ரெயில்கைக்கொட கத்தில்
 கழுமிப்பயில் கருவிக்கடி மதின்முற்றினர் கடிதின்.