| (இ - ள்.) நீர்ப்பரப்பிற் போர் செய்தவர் (அந்நீர்ப் பரப்பினையுடைய கிடங்கோடு கெட) மதிலின்கட் குழுமி மிக்குப் போர்செய்தவர் இயந்திரங்களோடு உயிர்கெடக் கணையமரஞ் சேர்ந்த கதவை யுடைத்துப் புறமதிலைத் தம்மகப்படுத்தி அகத்தின்கண்ணுள்ள காவலோடு கூடிய பொறிகளையுடைய மதிலை விரைவில் வளைத்தன ரென்க. (வி - ம்.) அழுவம் - பரப்பு. எழு - கணையமரம். இது கதவிற்கு வலியாக விட்டுவைப்பது. அகத்திற் கருவிக் கடிமதில் எனக்கூட்டுக. கழுமுதல் - நெருங்குதல். திணை - உழிஞை. துறை - கடைஇய சுற்றமர் ஒழியவென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வு. புறத்தோன் படையைச் செலுத்தி புறமதிலிற் செய்யும் போரின்றாக அகத்தோன் படையை வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டுள மதிலை வளைத்த வினைமுதிர்ச்சி. ஏறு தோட்டி கதவு முதலிய கோடல், அகமிசைக் கிவர்ந்தோன் பக்கத்தின்பாற் படும். (60) | | உழிஞைப்படை யெதிர்நோக்கிய வொற்றோடி வணங்கி | | | அழிவுற்றொழி யமரர்க்குல கருளப்பரன் மதலை | | | வழிவந்தனன் கொடிவெம்படை வல்லைப்புரி சையைவென் | | | றொழிவின்றுய ரகன்மாமதி லொடுநேர்ந்ததை யெனலும். |
(இ - ள்.) உழிஞைப் படையினைத் தம்மெதிரே நோக்கிய தூதுவர் ஓடிச்சென்று (தாரகனை) வணங்கி முன்னர் நம் போரின்கண் அழிந்து வெந்நிட்ட தேவர்களுக்கு உலகினைக் கொடுக்க இறைவன் திருமகன் பின்னர் வருகின்றான். அவன் தூசிப்படை விரைவாக மதிலை வென்று எக்காலத்துங் கெடுதலின்றி யுயர்ந்த உண்மதிலின்கண்ணுள்ளாரோடு போர் தொடங்கியது என்று கூற. (வி - ம்.) ஒற்று - தூதுவர். வழிவருதல் - பின்வருதல். வந்தனன் காலமயக்கம். இதனை "வாராக்காலத்தும் நிகழும் காலத்துமோராங்கு வரும்வினைச் சொற்கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல். விரைந்தபொருள வென்மனார் புலவர்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. கொடிப்படை - தூசிப்படை. இது முன்னர்ச் செல்லும்படை, நேர்ந்ததை - ஐ சாரியை. திணை - உழிஞை. துறை - அகத்துழிஞை யோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத்துரைத்தல். (61) | | பொன்னும்பிற பொருளும்புக "லகுஞ்சர ணடைவோர் | | | மன்னுங்கொள நல்கிக்களி மல்கத்தவி சமரும் | | | மின்னுங்கதிர் முடியான்விரை செலலுற்றன னறியாக் | | | கொன்னும்படை புடைமுற்றின குரமான்வைய முற்றான். |
(இ - ள்.) பொன்னினையும் ஏனைய பொருளினையும் யாவரும் புகழத்தக்க உலகினையும் தனதடியினை யடைவோர் கொள்ள வளித்தலால் இன்பம் பெருக ஆசனத்தின்கண்ணே தங்கும் ஒளிவிடுகின்ற முடியினையுடைய தாரகன் விரைந்து செல்லுதலுற்றனள் (கண்டார்க்கு) அச்சத்தை யுளவாக்கும் படைகள் அறிந்து அவன்பக்கலிற் சூழ்ந்தன. அவன் குளம்பினையுடைய குதிரைபூட்டிய தேரின் மேலேறினான். |