| (வி - ம்.) கொன் - அச்சம். குரமான் - குளம்பினையுடைய குதிரை. மன், உம் : அசை. இனி மிகுதியுங்கொள வெனினுமாம். (62) | | குடைநாட்கொளல் வாணாட்கொளல் குறியாவர சவுணன் | | | உடைநாளழி வறியாதவ னுரனொன்றிய வாழிப் | | | படைநாரணன் மகன்வெண்குடை பற்றக்குடை யேயாய் | | | அடையாவமர் வுற்றாலன முடிமீக்குடை நிழல. |
(இ - ள்.) (மன்னர்கள் போர்குறித்துச் செல்லுங்காலைக் கொள்ளும்) குடைநாட் கோடலையும் வாணாட் கோடலையும் (ஆராய்ந்து) கருதாத அரசனாகிய அவுணனும் தனக்குடைமையாகிய வாணாளிறுவதை யறியாதவனுமாகிய தாரகன் (போரின்கட் டன்) மார்பிற் பொருந்திய ஆழிப் படையினையுடைய திருமாலின் மகனாகிய காமனுடைய வெண்குடைதான் பற்றக்குடையாக அடைந்து பொருந்தினாலன்ன குடை முடியின்மீது நிழலைச் செய்யாநிற்க. (வி - ம்.) அரசவுணன் - பண்புத்தொகை. குறியா - ஈறுகெட்ட பெயரெச்சம். உடைநாள் - வாழ்நாள். உரன் - மார்பு. நாரணன் மகன் வெண்குடை - திங்கள். நாட்கொளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல். இதனைக் 'குடையும் வாளும்' என்னும் தொல். 97, 98 ஆம் சூத்திரத்தானும் உரையானு மறிக. (63) | | கற்றைக்கதி ரங்கைத்துணை கலைவெண்மதி யாழி | | | பற்றிச்செல நீட்டிப்பத மின்றிச்சுருக் குவபோற் | | | கொற்றக்குடை நிழலிற்குரு மல்குமிணைக் கவரி | | | எற்றத்துய ரியதானவன் புடைதாழ்ந்தெழுந் துளர. |
(இ - ள்.) கலைவெண்மதியம் தொகுதியுடைய கதிராகிய இணைக் கரங்களை (தாரகன் மார்பின்கண்ணுள) சக்கரப்படையினைப் பற்றிக் கொண்டு செல்ல நீட்டிக் காலம் வாய்க்கப் பெறாமையால் சுருக்குவ போல வெண்கொற்றக் குடை நிழலின்கண் வெண்ணிறம் பொருந்திய இரண்டு சாமரங்கள் (பகைவரை) வெல்லுந் துணிவோடு கூடிய உயர்ச்சியுற்ற தாரகன் இருபக்கலிலும் தாழ்ந்துயர்ந்துள்ள. (வி - ம்.) பதம் - காலம். குரு - நிறம். ஏற்றம் - எற்றமென விகாரமெய்தி நின்றது. ஏற்றம் - துணிவு. இதனை "ஏற்றம் நினைவுந் துணிவுமாகும்" தொல் - சொல். சூத்திரத்தா னறிக. உளர - துள்ள. (64) | | கண்வைத்தம ரரையோம்பிய கந்தன்றம தரசை | | | மண்வைப்பொடு மடவந்தமை கேளாமற மூளா | | | விண்வத்துயர் பலவைப்பையும் வெய்தெற்றுவ துறழ | | | எண்வைத்துயர் பலவார்கொடி யெண்டிக்கினு மசைய. |
|