பக்கம் எண் :

660தணிகைப் புராணம்

(இ - ள்.) திருக்கடைக்கண் சாத்தித் தேவர்களைக் காத்த குமரவேள் தங்களிறைவனை இப்பூமியோடுங் கோறல் செயவருந்தன்மை கேட்டு மறமூண்டு வானத்தின்கண் பொருந்திய பலவுலகங்களையும் சீற்றங்கொண்டு கெடுத்தலை யொப்ப அளவைகளுள் வைத்து அளக்க முடியாத மிக்க கொடிகள் எண்டிசைக்கணும் அசையா நிற்க.

(வி - ம்.) கண் - கண்ணோட்டமுமாம். வெய்து - கோபங்கொண்டு. எண் - அளவை. தமதென்றது - ஈண்டு கொடிகள்.

(65)

 சிறக்கும்வகை தமையோம்பிய செல்வத்துயர் குரிசில்
 இறக்கும்பரி செய்த்துள்ளக மேங்கிக்கத றுவபோற்
 பிறக்கம்படு வள்வார்ப்பணை பெரிதுங்குளி றத்திண்
 இறக்கட்டிகி ரித்தானவ னிமிர்தீயினி றந்தான்.

(இ - ள்.) சிறக்கும் வகை தங்களைக் காத்த எல்லாச் செல்வங்களாலு முயரிய தாரகன் முருகனோடு போர்செய்து இறக்குந் தன்மையை யறிந்து அகத்தினுள்ளே ஏக்கமுற்று அலறுவனபோல ஒலி பொருந்திய வாராலிறுக்கிக் கட்டிய மிக்க வாத்தியங்கள் மிக்கு முழங்கவலிய மார்பின்கண் திருமாலின் ஆழிப் படையையுடைய தாரகன் மிக்க நெருப்பினைப்போல இறந்தா னென்க.

(வி - ம்.) எய்த்து - அறிந்து. பிறக்கம் - ஒலி, விளக்கமுமாம். நிறம் - மார்பு. இறந்தான் - சென்றான்.

(66)

 மன்னாமவு ணன்கண்ணிணை வட்டித்தழ லுமிழ்வ
 தென்னாய்முடி யாதின்னினி யெனமண்மகள் விண்ணில்
 பொன்னாகிய தன்மாற்றவ ளொடுபோய்மறைந் தொழுகத்
 தன்னாருரு வேறாயெழுந் தனதூள்விழி தகையும்.

(இ - ள்.) அரசனாகிய தாரகன் இருகண்களுஞ் சுழன்று நெருப்பைக் காலுதலான் இனி யாதாய் முடியுமோவென்று நிலமகள் விண்ணின் கண்ணுள்ள பொன்னுலகமாகிய மாற்றவளோடுஞ் சேர்ந்து கரந்து வைகத் தனக்குப் பொருந்திய வடிவம் வேறாய்க்கொண்டு எழுந்தாலொத்த தூளி விழிகளைத் தடுக்கும்.

(வி - ம்.) வட்டித்து - சுழன்று. உமிழ்வது தொழிற்பெயர். முடியாதோ என்பதன்கண் வினாவின்கண் வந்த ஏகாரந் தொக்கது. மாற்றவள் - எதிரான பொன்னுலகமாகிய மகள். மறைந்தொழுகல் - அவுணனுக்கஞ்சி அவன் கட்புலன் கதுவாவண்ணம் விண்ணிலிருத்தல். மண்ணுலகமாகிய மகளும் அவன் கட்புலன் கதுவாமல் தன்னுருவை மாற்றித் தூளி வடிவுகொண்டு விண்ணுலகிற் செல்லுவதை யொப்பத் தூளி யெழுந்த தென்க.

(67)

 கச்சுச்செறி யிடையார்கழல் கலவுங்கழ லுடையார்
 வெச்சென்றடு படையாவுமி ளிர்க்கும்புய வலியார்
 அச்சுற்றுல கீரேழும டங்கப்பொரு மிகையார்
 நொச்சிப்படை யினர்முற்றிய நொறில்வெய்யரி னேர்ந்தார்.