| | மனம டிந்தவர் மகவு யிர்த்திலர் மயிர்கு லைந்தவர் மாதர்பேர் | | | தனைய டுத்தவர் புறன ளித்தவர் தக்க வெம்படை கையெடார் | | | சினம டிந்தடி பின்பெ யர்த்தவர் செருவி னொந்தவ ரிவரைவிட் | | | டினம றிந்துகி ளந்த போர்களி ழைத்து ளாரிரு வோர்களும். |
(இ - ள்.) இருபக்கலிலுமுள்ள வீரர்கள் மனக்கவலை யோடிருப் பவரும் மக்களைப் பெறாதவரும் மயிர் சிதைந்தவரும் பெண் பெயரினையிடப் பெற்றவரும் புறமுதுகு காட்டினவரும் ஒத்தபடை யெடாதவரும் சீற்றம் நீங்கிப் பிறக்கடி யிட்டவரும் போரில் வருந்தினவருமாகி இவர்களை நீக்கி (யானைமறவரோடு யானைமறவரும், இவுளி வீரரோடு இவுளி வீரரும் போர் செய்தலாகிய சிறப்புடைய அரசியலாற் கூறிய) முறையை யறிந்து போர்செய்தன ரென்க. (வி - ம்.) சிறப்புடை அரசியலாவன :- மடிந்த வுள்ளத்தோனையும் மகப்பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்தபடை யெடாதோனையும் பிறரும் இத்தன்மை யுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலு முதலியவாகும். இதனை "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்" என்னும் முதலடியையுடைய புறநானூற்றுச் செய்யுளடிகளானு மவற்றினுரையானுங் காண்க. (71) | | தேரி றக்கினர் வேழம் வீழ்த்தினர் தேசி கப்பரி தாழ்த்தினர் | | | வாரி றுத்தனர் கச்ச றுத்தனர் வார்கொ டித்திர ணூறினார் | | | தாரி றுத்துடறோள டர்த்தனர் தாடு ணித்தனர் தலையொடும் | | | போரி ரித்தன ரின்ன வாறு பொலிந்த வூரகப் பாசியே. |
(இ - ள்.) (இருபெரும் படையின்கண்ணுள்ளவர்களும் தத்தம்மோடு எதிர்த்த தேர்மறவரைத் தேரையுடைத்து அத்தேரின்கணின்று மிறக்கினர்; யானைகளைக் கொன்று வீழ்த்தினர்; அழகினையுடைய குதிரையினையும் வீழ்த்தினர்; தோலினையுங் கெடுத்தனர். இடைக்கச்சினையு மறுத்தனர்; நீண்ட கொடித்திரளையு மறுத்தனர்; மார்பின் மாலைகளையு மறுத்தனர்; பகைவரை வருத்துகின்ற தோளினையும் வெட்டித் தலையினோடு கால்களையும் வெட்டிப் போரினை விட்டனர்; இவ்வண்ணமாக ஊர்ச்செரு வீழ்ந்த பாசி மறனென்னுந்துறை நிகழ்ந்த தென்க. (வி - ம்.) தேசிகம் - அழகு. வார் - தோல்; இது பரிசைப்படை. தார் - போர்ப்பூ. உடல் - வருத்துகின்ற. இறக்கினர். இரித்தனர் என்பது விகாரம். இது திணை - உழிஞை. துறை, ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறன். பாசியென்றார், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியுந் தூர்ந்தும் பொருதலின். (72) | | கோயி னீள்பத ணங்கள் விண்டொடு கோபு ரக்குரு மேனிலை | | | வாயி லாதியி வர்ந்து டற்றிவ ழங்கி னார்படை வீதிகள் |
|