பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்663

 பாய சோரியி னாறு போன்றன பம்பி யூடறத் தேங்கலின்
 ஆய மாளிகை மேடை மேனிலை யாழி வாய்ப்பலி லங்கையே.

(இ - ள்.) கோவிற் புரிசைகளின்மேலும், மதிலுண் மேடைகளின் மீதும் வானளவோங்கிய கோபுரத்தின்கண்ணுள்ள நிறம் பொருந்திய மேனிலைவாயின் முதலியவற்றின் கண்ணும் ஏறிப் பகைவரை வருத்திப் படைகளைத் தொட்டனர். புறஞ்சேரி வீதியும் ஊர்வீதியும் பரவிய செந்நீரால் யாற்றினை யொத்தன. அவ்வீதிகளில் (செந்நீர் பெருகி மிகத் தேங்கலால் அழகிய மாடவரிசைகளும் மேடைகளும் மேனிலைகளும் கடலின் நடுவணுள்ள பல இலங்காநகரை யொத்தன வென்க.

(வி - ம்.) பதணம் - மதிலுண் மேடை. குரு - நிறம். படை வழங்கினாரெனக் கூட்டுக. பம்புதல் - நிறைதல். ஆய் - அழகு. இது திணை - உழிஞை. துறை - அகமிசைக் கிவர்ந்தோன் பக்கம். புறஞ்சேரி மதிலிலும் ஊர் மதிலிலும் அல்லாத கோயிற் புரிசைகண் மேலும் போர் செய்தற்குப் பரந்து செல்லுங் கூறுபாடு.

(73)

வேறு

 மண்டு நொச்சியினர் சாலமறம் வாடி விழலும்
 மிண்டு ழிஞ்ஞையினர் வெய்யவவு ணத்த லைவர்பின்
 கண்டு நிற்பவது கண்டுவயி ரங்க டவுறக்
 கொண்ட தேரினைவி டுத்துமண் குலுங்க விழியா.

(இ - ள்.) போரின்கட் செறிந்த உழிஞை வீரர்கள் தம்மோடு எதிர்த்துப் பொருந்திய நொச்சி வீரர்கள் வீரங்குறைந்து விழக்கொடிய அவுணத்தலைவர்களை வெந்நிடச் செய்துநிற்க அதனைக் கண்டு செற்றமானது செலுத்தத் தாரகன் தான் கைக்கொண்டுள்ள தேரினைவிட்டு நிலமசைய இறங்கி.

(வி - ம்.) தலைவர் இரண்டாவதன் தொகை. விகாரத்தியல்பு. வயிரம் - நெடுங்கால நிகழும் செற்றம். இழியா - இழிந்து.

(74)

 தார கப்பெயரி னானெடிய தண்டு திரியாப்
 பாரி டத்தொகைக ளோச்சியுயிர் பாற்றி நிமிரச்
 சார தத்தலைவ ராற்றலர்த ளர்ந்தொ ழிவுகண்
 டோரும் வீரர்க ளிலக்கருமொ ருங்கு பொருதார்.

(இ - ள்.) தாரகனென்னும் பெயரினை யுடையான் நெடிய தண்டு ஒன்றினைச் சுழற்றி யத் தண்டால் பூதக் கூட்டங்களை யடித்து உயிரைப் போக்கிக் கிளர்ச்சியுறப் பூதத்தலைவர்கள் (தாரகனோடு) பொருதற் காற்றலராகித் தளர்ந்தொழிதலைக் கண்ட போர்த்தொழிலின் ஆராய்ச்சியுடைய இலக்கரென்னும் குழுவினர் ஒருசேரப் பொருதன ரென்க.

(வி - ம்.) பாரிடம் - பூதம். ஓச்சல் - அடித்தல். பாற்றுதல் - கெடுத்தல். நிமிர்தல் - கிளர்ச்சியுறல். சாரதர் - பூதர். ஒழிவு : தொழிற்பெயர். ஓர்தல் - ஆராய்தல்.

(75)