பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்665

இளையோர் வெந்நிட்டதனாற் சடைவுகொண்ட நெஞ்சினை யுடையனாய் விரைவாகத் தாரகனோ டெதிர்த்து விரைந்து.

(வி - ம்.) ஆடு - வெற்றி. சமரம் - போர். பாடு - தன்மை. பகடு - பெருமை. "பகடிபம் பெருமை யேறு பஃறியாண் மேதி யைம் பேர்" என்னும் நிகண்டா னறிக. சினவி - சினந்து. சோடை - சடைவு. ஞெரேலென - விரைவுக் குறிப்பு. துனைதல் - விரைதல். இதனை "உராத்துனைத் தேர்த்தெனப் பாசமொருவ" என்னும் சிவஞான போதச் சூத்திர வடிவானும் அதனுரையானு மறிக.

(78)

 சிலைவ ளைத்தவுணர் தேவர்திசை யானை பிறவும்
 குலைய நாகரிடி யென்றுகுழை வுற்ற ழிதர
 உலைவி னாணொலியெ டுத்தனனொ ராயி ரமெனும்
 அலைசெய் வாளிகடு ரந்தனன ழன்ற வுணன்மேல்.

(இ - ள்.) அவுணர்களுந் தேவர்களும் திசையானைகளும் பிறவும் நடுங்க வில்லினை வளைத்து நாகர்கள் இடியென்று மனங்குலைவுற்று வருந்தச் சீற்றமுற்றுக் கெடுதலில்லாத நாணொலியை யுளவாக்கித் தாரகன்மேல் வருத்துகின்ற ஆயிரம் வாளிகளைச் செலுத்தின னென்க.

(வி - ம்.) துளையா வளைத்து அழிதர ஒலி யுளவாக்கிய அவுணன் மேல் வாளிகள் துரந்தன னென முடிக்க.

(79)

 ஆயி ரங்கணைவி டுத்தவுண னக்கணை யொரீஇக்
 காயி ரும்பகழி நூறுகட வக்க டிதவை
 மாயி ரும்பகழி நூறுகொடு மாற்ற வரதன்
 சேய டுஞ்சிலையின் வல்லனிவ னென்று தெளியா.

(இ - ள்.) தாரகன் ஆயிரம் வாளிகளை விடுத்து வீரவாகுவிட்ட அக்கணையை நீக்கி வருத்தத்தக்க பெரிய நூறு அம்புகளைச் செலுத்த வீரவாகு விரைவில் பெரிய நூறு அம்புகளைத் தொடுத்து அவன் விட்ட நூறு அம்பினையு மாற்றத் தாரகன்மேலோனாகிய இறைவன் மகன் கோறல் செய்யும் விற்றொழில் வன்மையுடையான் என்று தெளிந்து.

(வி - ம்.) ஒரீஇ - ஒருவி. காயிரும்பகழி - வினைத்தொகை. வர தன் சேய் என்றது வீரவாகுவை. தெளியா - தெளிந்து.

(80)

 தெய்வ மாப்படைசெ லுத்தவவு ணன்றி றலினான்
 வெய்ய வப்படைவி டுந்தொறும்வி டுத்தொ ருவினான்
 உய்வ தொன்றுமறி யாதவன்ம ருட்கை யுளனாய்
 ஐய மாயையின டர்ப்பவத னைக்க டவினான்.

(இ - ள்.) தாரகன் பெரிய தெய்வப் படையினைக் கடவினான். வீரவாகு என்பான் கொடிய அத்தெய்வப் படைகளைத் தாரகன் கடவுந் தோறும் அத்தெய்வப் படைகளைக் கடவி நீக்கினான். பிழைக்கும்வழி சிறிதும் அறியாதவனாகிய தாரகன் மருட்கை யென்னும் மெய்ப்பாடுடையனாகி அழகிய வஞ்சனையால் வருத்த அந்த வஞ்சனை செய்யும் அம்பினை