| (இ - ள்.) குறுமுனியிட்ட சாபமாவது தமிழ் முனிவர் தென்றிசைக்கட் போதுகின்றவர் இம்மலைக் குகையினுட் சென்றனர். செல்லச் செல்ல நெறிதோன்றாது மயக்கஞ் செய்வதனை நுனித்துணர்ந்து இஃதியற்கையன் றென்று கருதி அம்மாயையை வென்று முருகன்கை வேலால் அழியக்கடவ தென்று கூறினார் என்பது. (வி - ம்.) இறத்தல் - கடத்தல். தோற்றான் - காணப்படாதவனாகி யொழித்தான். பேது - மயக்கம். (84) | | சென்றவன் றிரும்பக் காணாச் சேனைகா வலரொண் வீரர் | | | துன்றிய விலக்க ரெல்லாந் தொடர்ந்தவந் நெறியே போந்து | | | நன்றெனத் தோற்றி யாங்கே நவைவிளை பிறனில் கூட்டம் | | | வென்றவம் முழையிற் புக்கு விளிந்தன ரவரு மாண்மை. |
(இ - ள்.) சென்றவனாகிய வீரவாகுவைத் திரும்பக் காணாத சேனைத் தலைவராகிய ஏனைய புகழையுடைய வீரரும் வீரம் பொருந்திய இலக்கரும் ஏனையோரும் (தாரகனை) தொடர்ந்து சென்றவழியே சென்று (முன்னர்) நல்லதெனத் தோன்றி யக்கணத்தே உய்தற்கரிய குற்றத்தினை விளைக்கின்ற பிறனில் விழைதலையொக்கும். குகைக்கட் புகுந்து அவர்களும் ஆண்மையைப் போக்கின ரென்க. (வி - ம்.) பிறனில் விழைதல், முன்னர் இன்பெனத் தோற்றிப் பின்னர் விழுங்கி யண்ணாத்தல் செய்கலா இன்னல் மிகுந்த நரகத் துன்பினைத் தருதல்போல இம்முழையுஞ் சென்றார்க்கின்பினை முன்னர் விளைத்துப் பின்னர் என்றும் நீங்கற் கியலாத துன்பினை யுளவாக்கி உயிரைச் செகுத்தலால் "பிறனில் கூட்டம் வென்ற வம்முழை" என்றார். வென்ற : உவமவுருபு. இதனை "போலப்புரைய" என்னும் தொல். பொரு. 22ஆம் சூத்திரத்தா னறிக. நவை - குற்றம். பிறனில் கூட்டம் - பிறன்மனை விழைதல். (85) | | வஞ்சனை வாய்த்த தென்று வரைமிசை யிவர்ந்து தீயோன் | | | விஞ்சிய வவுண ரார்ப்ப வில்வளைத் தனந்த கோடி | | | செஞ்சரந் தூண்டிப் பூதர் சேனையைச் சிதர்ப்ப நோக்கி | | | அஞ்சின ரமரர் வீணை யறவன்போ யடிகட் கோதும். |
(இ - ள்.) வஞ்சனை வாய்க்கப்பெற்ற தென்று கொடியவனாகிய தாரகன் கிரவுஞ்சமலையின்மீது ஏறி வீரமிக்க அவுணர்கள் வீரமுழக்கஞ் செய்ய வில்லினை வளைத்துப் பலகோடி செவ்விய பாணங்களைச் செலுத்திப் பூதர்களாகிய படையினைச் சிதரச்செய்ய அதனை நோக்கித் தேவர்கள் அஞ்சினார்கள். வீணையில் வல்லவனாகிய நாரதன் குமாரப் பெருமானுக்குச் சொல்வான். (வி - ம்.) இவர்ந்து - ஏறி. தீயோன் - தாரகன். அடிகள் - முருகன். வீணையறவன் - நாரதன். (86) | | எயிற்குல மூன்று மொன்றா யிருந்தன வெயிலை முற்றிக் | | | கயிற்கழ லவுண ராற்றல் காற்றிமா முகவ னெய்ப்ப |
|