பக்கம் எண் :

668தணிகைப் புராணம்

 அயிற்குலப் படைக டூண்டி யவன்விளை புணர்ப்பிற் பட்டு
 வெயிற்குரு மோலி வீரர் வெற்பக மயங்கி னாரால்.

(இ - ள்.) மும்மதிற் கூட்டமு மொன்றா யிருந்தாலொத்த மதிலினை முற்றுகைசெய்து கொக்குவாயை யுடைய மணிவடத்தை யணிந்த அவுணர்களின் வன்மையைப் போக்கித் தாரகன் இளைக்கக் கூட்டமாகிய கூர்மை பொருந்திய வேற்படை முதலியவற்றைச் செலுத்தி அத்தாரகன் செய்த மாயையிற் கட்டுப்பட்டு ஒளிபொருந்திய நிறத்தையுடைய முடியினை யணிந்த வீரர்கள் கிரவுஞ்சமலையினுள்ளால் மயங்கினா ரென்க.

(வி - ம்.) வீரர் முன்னர் வென்றியெய்திப் பின்னர்த் தாரகன் செய்த மாயையாற் கட்டுண்டு தோல்வியுற்றன ரென்பார் "மாமுகவன் எய்ப்ப அயிற்குலப் படைகடூண்டி யவன்விளை புணர்ப்பிற்பட்டு, வெயிற்குரு மோலி வேந்தர் வெற்பக மயங்கினார்" என்றா ரென்க.

(87)

 நஞ்செனக் கொதித்துத் தீயோ னம்படை யெஞ்சிற் றெல்லாம்
 பஞ்சியிற் பறப்பக் காலாய்ப் படர்ந்தன னென்ன மஞ்சன்
 அஞ்சலிர் தேவ ரென்னா வணிமணிக் கொடிஞ்சித் திண்டேர்
 வெஞ்சினத் தடுபோர் ஞாட்பி்ன் விரைசெல வுந்திச் சென்றான்.

(இ - ள்.) கொடியவனாகிய தாரகன் கண்டோர் நஞ்சென்று கழறும் வண்ணம் சீற்றமிக்கு எஞ்சியதாகிய நம் படை யாவும் பஞ்சினைப்போலப் பறக்கும்வண்ணம் காற்றாகிச் சென்றானென்று நாரதன் சொல்லக் குமரன் தேவர்களை அஞ்சல்மின் என்று, திருவாய் மலர்ந்தருளி அழகிய மணிகள் பதித்த கொடுஞ்சியினை யுடைய வலிய தேரினை வெய்ய சீற்றத்தோடு கோறல் செய்கின்ற போரின்கண் விரைவாகச் செல்லும்படி செலுத்திச் சென்றன னென்க.

(வி - ம்.) கால் - காற்று. மஞ்சள் : போலி. கொடிஞ்சி - தாமரைப்பூ வடிவாகச் செய்து தேர் நடுவண் நடுவது. தேர் மொட்டுமாம். ஞாட்பு - அமர். போர் ஞாட்பு - இருபெயரொட்டு.

(88)

 ஆர்த்தன பூதவெள்ள மடைத்தன பதாகை வானம்
 போர்த்தன திசைக ளோதை பொலிந்தன சமர்செய் சூழல்
 தூர்த்தனர் மலர்கள் விண்ணோர் துளும்பின கடலு மண்ணும்
 வேர்த்தன ரமர்த்த வீரர் வேறிருந் தவுணர் தொக்கார்.

(இ - ள்.) பூதவெள்ளம் முழங்கின; கொடிகள் வானினை மூடின; அமர் செய்கின்ற பறந்தலை (வீரர்களாற்) பொலிவுற்றன. தேவர்கள் மலர்களைச் சொரிந்தனர்; கடலும் நிலனும் துளும்பின. தேவர்கள் வெயர்வினை அடைந்தார்கள். போர்செய்த வீரர்கள் அவுணர்கள் வேறாக இருந்து தொக்கா ரென்க.

(89)

 நெடுமொழி கிளந்து சூழ்வார் வஞ்சின நிகழ்த்தி நேர்வார்
 விடுகணை பாய்ந்து பாய்ந்து மெய்யெலாந் தூணி போல்வார்