பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்669

 படுபிண மிடறிச் சென்று பறந்தலை யுழக்கி வீழ்வார்
 இடுகிய வீரம் வேண்டா ரிருதிறத் தவரு மாதோ.

(இ - ள்.) இருபக்கலிலுமுள்ள வீரர்களும் அரசர்களுள் வைத்து மேம்பாடுற்ற மதிக்குடையை யுடையார்க்குத் தன் மேம்பாட்டுரையைக் கூறிப் பொருந்துவார். பகைவர் படையினிற் சென்று தன் னாண்மையினை எடுத்துக்கூறி எதிர்ப்பார். விட்ட கணைகள் பாயப்பெற்றுப் பாயப்பெற்று, மெய்யெலாந் தூணியொப்பார். இறந்த பிணங்களைக் காலால் இடறிப்போய்ப் போர்க்களத்தைக் கலக்கிக் கீழே வீழ்வார்கள். சுருங்கிய வீரத்தை விரும்பார்க ளென்க.

(வி - ம்.) நெடுமொழி - தன் மேம்பாட்டுரை. இதனை,

 "மன் மேம்பட்ட மதிக்குடை யோர்க்குத்
  தன் மேம்பாட்டுரை தானெடுத்துரைத் தன்று"

என்னும் வெண்பாமாலைக் கொளுவா னுணர்க. வஞ்சினம் - தன்னாண்மையைச் சொல்லுதல். இதனை,

 "ஒன்னாதார் படை கெழுமித்
           தன்னாண்மை யெடுத்து ரைத்தன்று"

என்னும் வெண்பாமாலைக் கொளுவா னுணர்க. மெய்யெலாந் தூணி யொப்பார் என்பது "கண்ணுந் தோளும் முலையுஞ் சுட்டி" என்னுஞ் சூத்திரத்தில் "தம் வினைக்கியலா எழுத்தலங் கடையே" என்றதனான் முடிந்தது. பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகலநின்று அம்பானெய்து அவ்வம்பு முதலியன ஒன்றொடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின் மெய்யெலாந் தூணிபோல்வார் என்றார். இதனைத் தும்பைத்திணை என்பார் தொல்காப்பியர். தொல். பொருள். புறம் 71-வது சூத்திரத்தா னறிக. இடுகுதல் - சுருங்குதல். இதனை

 "இடுகுமிடை யென்படும் ஏகலெனா
           பிடிமென்னடை மங்கையர் பேச"

எனும் நளன்கதை யடிகளா னுணர்க. தன் வீரத்திற் குறைந்த வீரர்களைக் கொன்று அதனாற் பெறும் வீரப்புகழை ஏற்றல் தன்னாண்மைக்குச் சாலாதென்னுங் கருத்தான் "இடுகிய வீரம்வேண்டார் இருதிறத்தவரு மென்" றார். எனவே, ஒத்த வீரமுடையார்மாட்டே போர்செய்வர் என்பது பெற்றாம். இதனை,

 "வீறின்மையின் விலங்காமென மதவேழமு மெறியான்
           மாறின்மையின் மறம்வாடுமென் றெறியானயி லுழவன்"

என்னும் சிந்தாமணிச் செய்யுளா னறிக.

(90)

 மடித்திதழ் தின்னார் பூதர் வாலெயி றழுந்தி மாதர்
 துடித்திடு மதர நேரிற் சூழ்ந்தவர் படைக ணம்மேல்
 எடுத்திடா ரென்று தீயோ ரிமைமுழு தொழியக் காய்ந்த
 தடுத்தகண் வெகுளிச் செந்தீ யழித்திமைப் புளதா மென்றே.