பக்கம் எண் :

670தணிகைப் புராணம்

(இ - ள்.) பூதவீரர்கள் வெள்ளிய பற்கள் பதித்தலால் தம்மதரங்கள் செந்நிறமுற்றுப் பெண்கள் துடிக்கின்ற இதழினை யொப்பின், எதிர்த்தவர் (பெண்டன்மை யுடையானென்று கருதி) நம்மீது படைதொடாரென்ற சீற்றத்தால் இதழினை மடித்துத் தின்னார். கொடியவர்களாகிய வீரர்கள் சீற்றமாகிய நெருப்புமீள விமைத்தலுளதா மெனக் கருதித் தம் முகத்திற் பொருந்திய மேலிமை முற்றிலும் நீங்க எரித்ததென்க.

(வி - ம்.) அழித்திமைதல் - மீள விமைத்தல் அழித்திமைத்தலால் ஆண்டன்மைக் கழிவாமெனக் கருதிக் கோபாக்கினியே மேலிமையை எரித்த தென்பார் வெகுளிச் செந்தீ இமை முழுதொழியக் காய்த்தது என்றார். இதனை,

 "விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
           ஒட்டன்றோ வன்கண வர்க்கு"

என்னும் திருக்குறளா னறிக.

(91)

 தார்த்தடந் திணிதோட் பூதத் தலைவர்பல் கவந்த மாட
 ஆர்த்தழன் முளிபுன் மேய்ந்தாங் கையென நூழிலாடித்
 தேர்த்திரண் மிதப்ப நெய்த்தோர் தேங்கியும் போரி னீங்கார்
 நீர்ச்செரு விழைந்த பாசி நிலையினைத் தெரித்து நின்றார்.

(இ - ள்.) மாலையை யணிந்த பெருமையோடு கூடிய திண்ணிய தோளினையுடைய பூதத் தலைவருடைய பல மெய்களுமாட வீரமுழக்கஞ்செய்து, அழல் காய்ந்த புல்லினைத் தின்றாற்போல விரைவாகக் கொன்று ஆடித், தேர்க்கூட்டங்கள் மிதக்கப் புண்ணீர் பெருகியும், போர்த் தொழிலினீங்காராய் நீர்ச்செரு விழைந்த பாசிநிலை யென்னுந் துறையினைத் தெரிவித்து நின்றா ரென்க.

(வி - ம்.) கவந்தமாடல் - மெய்யாடல். இதனை, இருநிலந் தீண்டா வருநிலை என்பர் தொல்காப்பியர். தொல். பொருள். புறம் 71 ஆம் சூத்திரம். திணை: தும்பை. பதிற்றுப்பத்து நான்காம் பத்து மெய்யாடல் என்பர். மெய்யாடலாவது ஒரு பெயருடையார் பலர் பட்டக்கால் உடல் எழுந்தாடுவ தென்பர் உரையாசிரியர். அப்பாட்டிற்கு மெய்யாடு பறந்தலை யெனப்பாட் டுடையார் பேரிட்டார். நூழில் - கொன்று ஆடல். இதனை,

 "கழல் வேந்தர் படை விலக்கி
           அழல் வேறிரித்து ஆட்டமர்ந் தன்று"

என்னும் வெண்பாமாலையா னுணர்க. நீர்ச்செரு வீழ்ந்த பாசிநிலை கொண்ட மதிலகத்தை விட்டுப்போகாத புறத்தோரும், அவரைக் கழியத்தாக்கலாற்றாத அகத்தோரும் எயிற்புறத் தகழியினிருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கண் போரை விரும்பல். இவ்விரு சேனையும் இந்நிலை யாற் போர்புரிதலால் 'பாசிநிலையினைத் தெரித்து நின்றார்' என்றார்.

(92)