மிகப் பெரும்பயனாக விளைவித்த நெற்கள் மரகத மணி போன்ற மெல்லிய உருவம் நீங்கப் பொன்போன்ற மேனியோடு விளங்கிப் பல அறங்களையும் வளர்க்கும் தன்மையால் இரவில் வளத்தைச் செய்கின்ற கதிரைச் சடையி லமைத்துள்ள சிவபெருமான் பாகத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமையம்மையாரையு மொக்கும். (வி - ம்.) விரவு - (வயலிற்) கலந்த; கவுரம் - பொன்னிறம்; உமையம்மையார் பொன்னிறம் பெற்ற கதை காஞ்சிப் புராணத்திற் காண்க. இரவு வளஞ்செய் கதிர் - சந்திரன்; உமைமாதும் என்ற உம்மை இறந்தது தழீஇயது. "சிவஞானமுணர்ந்தோர் கையிற்றானம்" என்னும் சிவஞான சித்திச் செய்யுளும், "தாஞ்சிறிதாயினும் தக்கார் கைப்பட்டக்கால், வான்சிறிதாப் போர்த்து விடும்" என்னும் நாலடிச் செய்யுளின் கருத்தையும் முதலடியிற் காண்க. ஆற்ற - மிக; இதுவும் மேலையணி. உழவர் அளித்த சில உதவிகளாவன; உழுதல், எருவிடல், களைகட்டல், நீர்கால்யாத்தல் என்பன. வளக்கதிர் இசை நோக்கி மெலிந்து நின்றது. (119) | | உடல்கருவி புவனமுறு போக மெல்லா | | | முடங்கியைந்துஞ் சிவன்றோற்ற மொன்றே காணும் | | | மடனகன்ற சீரடியார் நுகர்ச்சி யாது | | | மருவாமை யொழிந்துநிற்கும் வாய்மை யொப்ப | | | இடனகன்ற தளைகடொறும் விளைந்த சாலி | | | யிரும்புனல்வேண் டாமையொழி பருவ நோக்கித் | | | தடநெடுந்தோ ளுழவரெல்லா மண்மி யாத்த | | | தண்புனலைக் கவிழ்த்துணக்குந் தொழிற்க ணின்றார். |
(இ - ள்.) பாசத்தாலாகிய அறியாமை நீங்கிய சிவஞானச் செல்வர்களாகிய அடியார்கள் கன்ம நுகர்ச்சிக் கேதுவாகிய தனுகரண புவனங்கள் அனுபவிக்கும் போகங்களாகிய யாவும், ஒருசேரக் கூடியிருந்தும் அவற்றாலாகும் இன்பதுன்ப நுகர்ச்சியில் தாம் பொருந்தாது வேறாய் நிற்கும் உண்மைநிலைபோல, இடமகன்ற வயல்கடோறும் விளைந்த நெற்பயிர்கள் மிக்க நீரை விரும்பாமை நீங்குகின்ற பக்குவத்தைக் கருதிப் பெருமை பொருந்திய தோளையுடைய உழவர்கள் யாவரும் அணுகி வயல்களிற் கட்டிய குளிர்ச்சி பொருந்திய நீரை வடித்து (வெளியேற்றி) உலரச் செய்யும் தொழிற்கணின்றனர். (வி - ம்.) அண்மி - நெருங்கி; யாத்த - கட்டிய; உணக்கும் - உலர்த்தும்; புனல் வேண்டாமைக்கு நுகர்ச்சி மருவாமை உவமம். இதுவும் மேலையணி. (120) வேறு | | ஆக்கும் பொழுதாக் கியளித் துலகம் | | | போக்கும் பதநேர் தலும்போக் குமருள் | | | தேக்கும் பரநேர் விளைசெந் நெலெலாம் | | | தாக்கும் வகைகண் ணினர்சார் குவரால். |
|