| | தன்னையு மறியா துள்ளந் தழைத்தெழு மன்பு பொங்க | | | இன்னவ னேயோ வீசன் மகனென வியம்புந் தோன்றல் | | | என்னலு மன்ன னேயா மிவனென வமைச்சர் கூற | | | முன்னவன் முன்னர்த் தேரின் முன்னினன் மொழித லுற்றான். |
(இ - ள்.) தன்னையுமறியாமல் உள்ளத்தின்கண் தழைத் தெழுகின்ற அன்பானது மிக இவ்விளையான்றானோ இறைவன் திருக்குமரனென்றியம்பு கின்ற தலைவனென்றுகூற, அமைச்சர்கள் அவனே இவன் என்று கூறத் தலைவனாகிய முருகன் முன்னர்த் தேரின்கண்ணே பொருந்திச் சொல்லத் தொடங்கினான். (வி - ம்.) முன்னவன் - முதல்வனாகிய குமரன். முன்னுதல் - பொருந்துதல். அன்னன் - அவன். (96) | | நாரணன் முதலா யுள்ளோர்க் கல்லது நம்மேற் போர்க்குக் | | | காரணி மிடற்றாற் குன்னுங் கடனிலை மைந்த வீங்குத் | | | தாரணி படையி னோடுஞ் சார்ந்ததென் னுரைக்க வென்றான் | | | பூரணப் பொருளா யுள்ள புண்ணிய னிதனைக் கூறும். |
(இ - ள்.) இளையோனே! நம்மீது போர்க்கு வருதல் நாரணன் முதலிய வலிகுன்றிய தேவர்களுக்கல்லாமல் கரிய கண்டமுடைய இறைவன் நினைத்தல் முறையின்றாகும். இப்பொழுது, மாலையை யணிந்த படையினோடு போர்க்குப் பொருந்திய காரணமென்னை கழறுக என்றார். எங்கும் நிறைந்த பொருளாயுள்ள அறவோனாகிய முருகப்பெருமான் கீழ்வருவனவற்றைக் கூறுவா னென்க. (வி - ம்.) மிடற்றோற்கு எனும் நான்காம் வேற்றுமை எழுவாய்ப் பொருட்டாய் நின்றது. | | "இன்னென வரும் வேற்றுமை யுருபிற்கு | | | இன்னென் சாரியை இன்மை வேண்டும்" |
என்றார்போல. தார் - மாலை. (97) | | முறைபுரிந் தவரை யோம்பி முறைமையிற் றிறம்பி மன்னோ | | | மிறைபுரிந் தோரைக் காதும் வேந்திலா வேந்த னெந்தை | | | அறைகழல் வீர விண்ணோர்க் கருஞ்சிறை யிட்ட வாற்றால் | | | இறையினும் முயிரைக் காற்ற வேயினன் போந்தா மென்றான். |
(இ - ள்.) ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த வீரனே. முறையுளிக் கோலோச்சியவரைப் பாதுகாத்துச் செங்கோன்மையினின்று மாறுபட்டு நடுக்கந்தருஞ் செயல்களைச் செய்தோரை அக்குற்றத்துக்குத்தக வொறுக்கும், தனக்கு ஒப்பாரும், மிக்காரு மிலனாகிய தலைவனாவான் என்தந்தை. நீ தேவர்களை மீட்டற்கரிய சிறையின்க ணிட்ட தன்மையால் இறைப் பொழுதிங்கண் நுங்களுயிரைப் போக்க ஏவினான் வந்தனன் என்க. |