பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்673

(வி - ம்.) மிறை - குற்றம். காதும் - கொல்லும். முறை - செங்கோன் முறை. அறைகழல் - வினைத்தொகை. காற்ற - போக்க.

(98)

 வரம்பிலா வாற்றற் செம்மல் வரவினைக் கிளத்த லோடும்
 வரம்பிலா வின்ப முக்கண் வள்ளலார் தமக்குத் தந்த
 வரம்பிலா வரமு மற்று மதித்துமா முகத்துத் தோன்றல்
 வரம்பிலாச் சீற்றம் பொங்க மற்றெதிர் கழறு கின்றான்.

(இ - ள்.) அளவில்லாத வல்லமையை யுடைய தலைவனாகிய முருகன் தன் வருதலைச்சொன்ன அளவில் வரம்பில்லாத இன்பத்தினையுடைய மூன்றுகண்ணை யுடைய வள்ளலாகிய சிவபெருமான் தமக்குக் கொடுத்த அளவில்லாத வரத்தினையும் மதித்துத் தாரகன் அளவில்லாத சீற்றமிக எதிர் சொல்லலுற்றனன்.

(வி - ம்.) செம்மல் - முருகன். முக்கண்வள்ளல் - சிவபெருமான். தோன்றல் - கயமுகாசுரன்.

(99)

 மாயனார் திகிரி யீது மார்பிடைக் காண்டி வீந்து
 போயினா ரன்றி யென்னைப் பொருதவ ருலகி னில்லை
 ஆயினார் பலரூண் வெற்புக் கடுபடை தமக்கு நீவந்
 தேயினா ரிளையைநீயு மேகென விறைவன் சொல்லும்.

(இ - ள்.) மார்பின்கண்ணுள்ள இத்திகிரி மாயவன் றிகிரியாம் காண்பாய்; இறந்தொழிந்தாரேயன்றி என்னொடு போர்செய்தவர் உலகத்தில் ஒருவருமிலராயினர். கிரவுஞ்சமலைக்கும், கொல்கின்ற என் படைக்கும், நீ வந்து ஏவப்பட்டார் பலரும் ஊணாயினர். முருகனே! நீயும் இளையை; நீ செல்வாயாக என்று சொல்ல இறைவன் சொல்வான்.

(வி - ம்.) வெற்புக்கு எண்ணும்மை தொக்கது. என்னைப் பொருதவர் : வேற்றுமை மயக்கம்.

(100)

 உடுவொளிக் குயர்ந்த திங்க ளுருகெழு பரிதிப் புத்தேள்
 விடுமொளிக் குயருங் கொல்லோ விண்டுகைத் திகிரி வென்றான்
 முடுகுபு நுமைய னாளு மண்டங்க ளன்றி முற்றும்
 நொடிவரை யடுநங் கைவே னுன்வயத் தாமே பேதாய்.

(இ - ள்.) விண்மீன்களின் ஒளியுள் வைத்துயர்ந்த வொளியை யுடையன் வெண்கதிர்க் கடவுள். நிறம் பொருந்திய செங்கதிர்க் கடவுள் வெளியிடுகின்ற ஒளியினுக்கும், உயர்ந்து விளங்கு மொளியுடையன் ஆவனோ? ஆகான், ஆதலான், விரைந்து நுமது தமையனாகிய சூரன் ஆளுகின்ற அண்டங்களன்றி ஏனைய அண்டங்க ளெல்லாவற்றையும், நொடிப்பொழுதிற் கொல்லும், வேற்படை நங்கையிலுள்ள அப்படை, பேதையே! உன் வயத்ததாகுமோ!