| (இ - ள்.) மிக்க வலியினையுடைய இளையோனாகிய முருகனும், நீண்ட சிலையை வளைத்து நாரியின்கட் பொருந்திய ஒலியை எழுப்பி விட்டனன். அண்டங்களெல்லாம் நடுங்கின. யாம் வேறல் செய்யேமெனினும் இப்போரின்கண் இறப்பேமெனினும் வீரனாகிய முருகனோடு போர் செய்தனன் தாரகன் என்று வீரர்கள் பலரும் கூறுவாராகலின் அங்ஙனம் கூறலாகிய வென்றியை இன்று உடையேமாயினே மென்று தாரகன், எடுக்கின்ற அம்புகள் பலவற்றை ஆராய்ந்து கொண்டானென்க. (வி - ம்.) இளையோன் - முருகன். சிறந்த வீரனோடு போர்புரிந்து இறந்தாலும் வென்றியே என்று கருதியபடியாம்.. (104) | | மிக்கவ ரில்லா வண்ணம் வென்றசீ ரிவன்முன் னோரைப் | | | புக்கடல் புகழே யாகப் புகலும்வை யகங்க ளென்றே | | | தொக்கபே ரண்ட மெல்லாந் தூள்படுத் துருவிற் பூசும் | | | முக்கணை நுதற்கண் வாய்த்த முதல்வனுங் கணைகைக் கொண்டான். |
(இ - ள்.) போர்த் தொழிலில் தம்மினு மிக்காரில்லையாம் வகை பகைவரை வென்றிகொண்ட சிறப்பினையுடைய இத்தாரகன் முதலியோரை இறைவடிவத்தோடு சென்று வேறல் செய்யாது வீரர் வடிவுடனேசென்று கோறல் செய்தலே புகழாக உலகிலுள்ளார் கூறுவார்களென்று தொக்க பெரிய அண்டங்களையெல்லாம் துகளாகச் செய்து திருவுருவிலணிந்து கொள்ளும் மூன்று கண்களில் வைத்து நெற்றிக் கண்ணை மறைத்த முதல்வனாகிய முருகன். அம்புகளைக் கையிற் கொண்டன னென்க. (வி - ம்.) சிவபெருமான் தனக்கியல்பா னமைந்த முக்கண்ணோடு தோன்றிக் கோறலை உலகம் புகழாதென்னும் கருத்தான் உலகம் புகழ்தற் கேதுவாக நுதற்கண்ணை மறைத்து முருகனாகவந்து போர்த்தொழிலே வெல்லும் பொருட்டு அம்பைக் கொண்டா னென்பார். "புக்கடல் புகழே யாகப் புகலும்வை யகங்க ளென்று, முக்கணை நுதற்கண் மாய்த்த முதல்வனுங் கணைகைக் கொண்டான்" என்று கூறினார். முக்கணை - ஐ : சாரியை. (105) வேறு | | எண்ணில் பல்கணை தான வன்றொட வேவொ ராயிரந் தொட்டவை | | | மண்ணி றுத்தவன் மீட்டோ ராயிரம் வாளி தூண்டவ வற்றையும் | | | அண்ண லையிரு வாளி யேவிய றுத்தொ ரம்பின வன்சிலைத் | | | திண்மை சிந்திவில் வேறெ டுக்குமுன் செல்ல வாயிர முந்தினான். |
(இ - ள்.) அளப்பிலவாகிய கணைகளைத் தாரகன் ஏவ அம்புகள் ஆயிரத்தைவிட்டு அவற்றை நிலத்தில் வீழும்வண்ணம் ஒடித்து, அவன் மீண்டும் ஆயிரம் அம்புகளைச் செலுத்த அவ்வம்புகளையும் தலைவனாகிய முருகன் பத்தம்புகளைத் தூண்டிப் பாழ்படுத்தி ஓரம்பினால் அத்தாரகன் வில்லின் வலியைக் கெடுத்து வேறுவில்லினை யெடுக்குமுன்னர் அவன்பாற் செல்ல ஆயிரம் அம்புகளைச் செலுத்தினன் என்க. |