| (வி - ம்.) தானவன் - கயமுகாசுரன். அவன் - அவ்வசுரன். அண்ணல் - முருகன். (106) | | வல்லை வாங்கிய வில்லி னாயிரம் வாளி தூவிம டித்தவை | | | அல்ல ழுத்திய வாக்கை யாளன னந்த வாளிது ரந்தனன் | | | எல்ல ழுத்திய மேனி யண்ணலி லக்க வாளியி னட்டவை | | | சொல்ல ழுத்திய கோடி வாளிது றுத்த னன்றனு வெங்கணும். |
(இ - ள்.) விரைவாக வளைத்த வில்லினின்றும் ஆயிரம் அம்புகளைச் செலுத்தி அவ்வாயிர மம்புகளையுங் கெடுத்து இருளினைப் பதித்தாலொத்த உடம்பினையுடைய தாரகன் அநேக அம்புகளைச் செலுத்தினான். விளக்கம் பொருந்திய திருவுருவுடைய தலைவன், நூறாயிரம் அம்புகளால் அவற்றைக் கெடுத்து, நிறைமொழி மாந்தர் வாயினின்றும் தோன்றி அவர் அருளினும், வெகுளினும், அவ்வப்பயனைத் தவறாதுறுவிக்குஞ் சொற்கள் போன்ற கோடி அம்புகளை உலகெங்கணும் நெருங்கும் படி செலுத்தினன். (வி - ம்.) எல் - விளக்கம். "எல்லே விளக்கம்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. சொல் - நிறைமாந்தர் வாய்ச்சொல். இனி, பெயர் பொறித்தவாளி எனினுமாம். (107) | | வாளி கோடியி ரட்டி யுந்தினன் மாயை மைந்தன ரன்மகன் | | | தூளி கண்டவை கோலி ரண்டுது ளைக்கை கோடிற விட்டனன் | | | நீளு றுப்பற வாயி ரங்கணை யானெ டுங்கொடி நூறினான் | | | ஆள வந்தவ னெட்டின் வில்லிறுத் தாயி ரத்தடர்த் தான் வையம். |
(இ - ள்.) மாயையின் மகனாகிய தாரகன் இருகோடி வாளிகளைச் செலுத்தினன் இறைவன் றிருக்குமரன் அவ்விரு கோடி யம்புகளையும் பொடியாகச் செய்து இரண்டம்பினைத் தாரகன் உட்டுளை பொருந்திய கையும், கொம்பும், கெடும்வண்ணம் விட்டான். இவ்வுலகத்தை யடிமை கொள்ளத் திருவுருக் கொண்டவனாகிய முருகன் ஆயிர மம்புகளால் நீண்ட உறுப்புக்கள் கெட, நீண்ட கொடியையுங் கெடுத்து, எட்டம்பால் வில்லினை யொடித்து, ஆயிர மம்புகளான் தேரினையு முடைத்தா னென்க. (வி - ம்.) துளைக்கை கோடு - உம்மைத் தொகை. விட்டனன் நூறினா னென்பன எச்சமுற்று. (108) | | பாய்ந்து வேறொரு வையம் வார்சிலை பற்றி வெங்கணை யாயிரம் | | | வாய்ந்த கால்வல வன்பு யத்தின்வ ருந்த வுய்த்திளை யோன்கணை | | | ஆய்ந்தொ ராயிர நெற்றி யேற்றவ யர்ந்து சோரிநி லத்துகச் | | | சாய்ந்த னன்றடந் தேரின் மாமுகன் சாய்ந்த வானவ ரோங்கவே. |
(இ - ள்.) தாரகன் வேறொரு தேரின்கட் பாய்ந்து நெடியவில்லைக்கையிற்பற்றிக் கொடிய வாயிர மம்பினை வலவனாக வாய்ந்த காற்றுத் |