பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்677

தேவனுடைய தோளின்கண் வருந்தும்படி செலுத்தி இளையோனாகி முருகன் ஆராய்ந்து ஆயிரமம்புகளை நெற்றியின்கண் எய்ய அயர்ச்சியுற்றுச் செந்நீர் நிலத்தின்கட் சிந்த முன்னர் போரிற்கிடைந்த வானவர்கள் உயர்ச்சியடையப் பெரிய தேரின்கண் சாய்ந்தா னென்க.

(வி - ம்.) சாய்ந்த - தளர்ந்த. தாரகன் உய்த்து இளையோன் ஏற்ற அயர்ந்து உகத்தேரிற் சாய்ந்தனனென வினைமுடிபு செய்க.

(109)

வேறு

 கண்டவ வன்படை காவலர் மானம லைப்பவொ ருங்குகலாய்
 மண்டிய ழற்படை யாவும்வ ழங்கவ ளங்குல வுங்குமரன்
 கொண்ட சிலைக்கணி ருங்கணை பௌவமுண் கொண்டலெ னச்சொரியத்
 திண்டலை தோள்கழல் சிந்தம டிந்தனர் செத்தில ரோடினரால்.

(இ - ள்.) இந் நிகழ்ச்சியைக் கண்ட சேனைத் தலைவர்கள் மானந் தங்களை வருத்த ஒருங்கு கலாய்த்து நெருங்கித் தீயினையொத்த அம்புகள் எல்லாவற்றையுஞ் சிந்த அழகுபொருந்திய முருகக்கடவுள் தன் திருக்கையிற் கொண்ட சிலைக்கணின்று பெரிய அம்புகளைக் கடலை யுண்கின்ற மேகம்போலச் சொரிந்து வலிய தலையும், தோளும், காலும், சிந்தா நிற்க இறந்தவர் பலர்; இறவாதவர் ஓடின ரென்க.

(வி - ம்.) கலாய் - கலாய்த்து. பௌவம் - கடல். செத்திலர் - பெயர்.

(110)

 அழிந்தவு ணர்ச்சியெ ழுந்தெழு தாரக
           னாவிளை வென்கொலென
 இழிந்தவு ளத்தின னிப்படை யாலிவ
           னெய்ப்பில னென்றுகனல்
 பொழிந்தடர் தெய்வத மாப்படை யாவும்பு
           குத்தின னன்னவைபோய்த்
 தொழுந்தகை யைத்தொழு தண்மையி னின்றதொ
           லைத்தவ னெண்ணமெலாம்.

(இ - ள்.) மடிந்த வுணர்ச்சி தோன்றி எழுகின்ற தாரகன் இங்கு நிகழ்ந்தது என்னை கொலோவென்று மடிந்த உள்ளத்தையுடையவனாய் இப்படைகளால் இவன் இளையா னென்று கருதி நெருப்பைக் கான்று கொல்லுகின்ற பெரிய தெய்வப் படைகளை ஏவினான். அப்படைகள் சென்று யாவரும் வணங்கத்தக்க பெருமையை யுடையனாகிய முருகனை வணங்கித் தாரகன் எண்ணங்களை யெல்லாங் கெடுத்து அவன் பக்கலின் நின்ற வென்க.

(வி - ம்.) ஆ : ஆச்சரியக் குறிப்பில் வந்தது. தகை : ஆகுபெயர். படைகள் அவன் எண்ணங்களைத் தொலைத்து நின்றன என வினைமுடிவு செய்க.

(111)