பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்679

"பே நா முருமென வரூஉ மூன்றும் அச்சப்பொருள" என்னும் தொல்காப்பியத்தா னறிக. அடுக்கல் - ஈண்டுக் கிரவுஞ்சம்.

(114)

 பொங்கழல் கான்ஞெகி ழித்திர ளாய்ப்புவி மாதிரம் வான்மிடையத்
 துங்கமி குந்தகல் சூரிய ரெண்ணில ராய்ச்சுல வுற்றழல்வான்
 இங்கன னந்தமெ ழுங்கிரி யோடுமி ழைத்தமை கண்டிளையோன்
 செங்கைய யிற்படை தூண்டின னோக்கிய தோன்முகன் சீற்றமுறீஇ.

(இ - ள்.) உயர்ச்சிமிக்க கிரவுஞ்சம், கொதிக்கும் நெருப்பைக் காலுகின்ற பொறிகளாய் நிலத்தின்கண்ணும், திசைகளின்கண்ணும், வானின்கண்ணும் பொருந்த, அளவில்லாத செங்கதிர்க் கடவுளாகிச் சுற்றித் தாரகன் சுடுதலைச் செய்வான் இவ்விடத்துப் பலதிறப்பட்ட மாயைகளைக் கிரவுஞ்ச மலையோடு கூடிச் செய்தமையை இளையோன் கண்டு, சிவந்த கையின்கண்ணுள்ள வேற்படையைச் செலுத்தினன். (அங்ஙனம் செலுத்தியதை) யானைமுகத்தை யுடைய தாரகன் கண்டு சினமுற்று
என்க.

(வி - ம்.) ஞெகிழி - தீப்பொறி. மாதிரம் - திசை. கல் - மலை. அனந்தம் - பல மாயைகள். இழைத்தல் - செய்தல். தோல் - யானை.

(115)

 இருதுணி செய்குவ லின்னதை யென்றெதி ரெய்தலு மார்புதுளைத்
 தருவரை யட்டடல் வீரர்ம யக்கம கற்றியெ ழுந்துயர்வான்
 பொருதிரை யுந்திது ளைந்திமை யார்பொழி பூமழை யுண்முழுகித்
 திருவளர் கைக்கணி ருந்ததெ ழுந்தது தேவர ருந்துதியே.

(இ - ள்.) இவ் வயிற்படையை இரண்டு துண்டமாகச் செய்வேனென்று எதிரேவரத் தாரகன் மார்பைத் துளைசெய்து யாவரும் கிட்டற் கரிய கிரவுஞ்சமலையைக் கொன்று (அம்மலைக் குகைக்கண் மயங்கிக் கிடந்த) வீரர்கள் மயக்கினை நீக்கி எழுந்துயர்ந்த வானத்தினை மோதுகின்ற வான்யாற்றில் படிந்து தேவர்கள் சொரிகின்ற மலர்மழையில் மூழ்கி அழகு வளர்கின்ற திருக்கரத்தின்கட் டங்கியது. இதனைக் கண்ணுற்றுத் தேவர்கள் செய்த அரிய துதி எங்கு நிறைந்தெழுந்த தென்க.

(வி - ம்.) உந்தி - நதி. கொடுமையே வடிவாகிய தாரகனையும், கிரவுஞ்சத்தையும், கொன்ற குற்றத்தை வான்யாற்றில் மூழ்கி வேல் நீக்கிய தென்பார். "வான் பொருதிரை யுந்தி துளைந்து" என்று கூறினார்.

(116)

வேறு

 குன்றொடு மவுணற் சாடிக் குடுமிகைக் கொண்ட செவ்வேள்
 முன்றிறல் வீர வாகு முதலியோ ரெவருந் தொக்கார்க்
 கொன்றிய கருணை நோக்க முதவியா டமரிற் றுஞ்சும்
 வன்றிற லாளர் தம்மை வருகென வெழுப்பிக் கொண்டான்.

(இ - ள்.) கிரவுஞ்ச மலையினோடு தாரகனைக் கொன்று வெற்றியைக் கொண்ட முருகப்பெருமான் முன்னர்க் கூடினாராகிய வலியினை