பக்கம் எண் :

680தணிகைப் புராணம்

யுடைய வீரவாகு முதலிய வீரர்கட்கு (அவரவர் தகுதிக்குப் பொருந்திய) கருணை நோக்கஞ்செய்து வென்றியைக்கொண்ட போரிலிறந்த வன்மையையுடைய வீரர்களை எழச்செய்து வாருங்கோளென ஏற்றுக் கொண்டன னென்க.

(வி - ம்.) குடுமி - வெற்றி. இதனை "குடுமியே வெற்றியுச்சி..." என்னும் நிகண்டானறிக. துஞ்சல் - இறத்தல்.

(117)

 தாரகன் விடுத்த தெய்வத் தறுகண்மாப் படைக ளோடும்
 கூரிய மாய னேமிக் கொழும்படை நின்ற வெல்லாம்
 வீரவா குவின்கை யுய்த்துப் போற்றென விளம்பிப் போர்செய்
 பாரினை யெவருஞ் சூழப் பணையெழ நீத்துச் சென்றான்.

(இ - ள்.) தாரக னென்பான் செலுத்திய அஞ்சாமையை யுடைய பெரிய தெய்வப் படைகளோடும் (தாரகன் கழுத்தின்கட் கிடந்த) திருமாலின் கொழுவிய கூர்த்த சக்கரப்படையும், நின்றனவாகிய எல்லாப் படைகளையும், வீரவாகுவின் கையின்கட் கொடுத்துக் காப்பாயாக எனத் திருவாய்மலர்ந்து யாவருந் தன்னைச் சூழ்ந்துவர வெற்றி முரச மொலிக்கத் தன்னைத் தேவர்கள் முதலிய யாவரும் சூழப் போர்க் களத்தினை நீங்கிச் சென்றன னென்க.

(வி - ம்.) பணை - ஈண்டு வீரமுரசம்.

(118)

 போரிடை வீழ்ந்தோர் மெய்யிற் பொங்கிமேற் றுளித்த நெய்த்தோர்
 ஆரவேற் றுமைப்பட் டென்ன வலரிமெய்ம் முழுதுஞ் சேந்தச்
 சோரியை மண்ணு வான்போற் றொடுகடற் குளித்தான் வீழ்ந்த
 தாரகன் வீரச் செங்கேழ் தரணிவீழ்ந் ததுவும் போன்றான்.

(இ - ள்.) போரின்கண் வீழ்ந்த வீரர்கள் மெய்யினின்றும் பொங்குதலுற்று, வானின்கட் குளித்த செந்நீரானது பொருந்துதலால் வேறுபாட்டை யடைந்தாற்போலச் சூரியனுடல் முழுதுஞ் செந்நிறமடைய அச்செந்நீரைக் கழுவுவானைப்போலத் தோண்டப்பட்ட கடலின்கண் மூழ்கினான். அன்றியும், தாரகன் செந்நிறத்தோடு கூடிய வீரம் நிலத்தின்கண் வீழ்ந்ததனையும் ஒத்துளா னென்க.

(வி - ம்.) நெய்த்தோர் - செந்நீர். அலரி - சூரியன். 'சேந்து' என்பது எச்சத்திரிபு. கீர்த்தியை வெண்ணிறமாகவும், வீரத்தைச் செந்நிறமாகவும் கூறல் உபசார வழக்கு.

(119)

 வெய்யவ னொளிமை யாப்ப விளங்குருக் குமரன் வீரச்
 செய்யொளிப் பிழம்பு தோற்றிச் செறிந்தென மாலைச் செவ்வான்
 ஐயெனத் தோன்றிற் றாங்க ணவன்பெரும் புகழ்சீர்த் தென்னப்
 பெய்யொளி முழுவெண் டிங்கள் பிறக்கம்வாய்ந் தெழுந்த தன்றே.

(இ - ள்.) வெங்கதிர்க் கடவுளின் ஒளிமயங்க விளங்கும் நிறத்தினையுடைய முருகனது வீரமாகிய செந்நிறத்திரட்சி வெளிப்பட்டுச்