பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்681

செறிந்தாற்போல மாலைக்காலத்துச் செவ்வான மழகாகத் தோன்றியது அஞ்ஞான்று (அத்தாரகனைக் கொன்ற) குமரனது பெரிய புகழ் சிறப்புற்றதுபோல ஒளியைக் காலுகின்ற நிறைமதியின் விளக்கம் வாய்க்கப் பெற்றுத் தோன்றிய
தென்க.

(வி - ம்.) குமரன் வீரப்பிழம்பு தோன்றிச் செறிந்தாற்போல மாலைக்காலத்துச் செவ்வான் தோன்றிற்றென வினைமுடிபு செய்க. ஐ - அழகு. சீர்த்தி - மிக்கபுகழ். இதனை "சீர்த்தி மிகுபுகழ் ..." என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. அன்று, ஏ : அசை, மையாப்ப - மயங்க. வீரம் - தாரகன் முதலியோரைக் கொன்றதனாலுளவாகிய வீர மென்க. புகழ் வீரபாகு முதலியோரை எழுப்பியதா லுண்டாய புகழென்க.

(120)

 மூவுல குய்ய வந்த முன்னவன் சீர்த்தி யோடும்
 தேவர்கள் புகழும் பாங்கர்ச் சீர்த்தென நெடுவா னெங்கும்
 தாவில்பல் லுடுவின் கூட்டந் ததைந்தன வாய காலைக்
 காவன்மூ வர்களும் வேண்டக் கடவுளர் சிலம்பைச் சார்ந்தான்.

(இ - ள்.) மூன்றுலகங்களு முய்யும்பொருட்டுத் தோன்றிய முன்னவனாகிய முருகன் மிகுபுகழோடு தேவர்கள் கீர்த்தியும், பக்கலிலே செறிந்தாற்போல அகன்ற வானமெங்கணுங் கேடில்லாத விண்மீனின் கூட்டமும் செறிந்தன; அக்காலத்து உலகங்களை மூவரும் விரும்பத் தேவமலையை யடைந்தன னென்க.

(வி - ம்.) முன்னவன் - முருகன். சீர்த்தென - சிறந்தாற்போல. கூட்டமும் எனும் உம்மை. விகாரத்தாற் றொக்கது. ஆயகாலை - அக்காலை.

(121)

 முந்துறத் தேவத் தச்சன் முறைமையி னாங்கட் செய்த
 கொந்தொளி நகரிற் சேனைக் குழாத்தொடு மசைந்தா னாகப்
 பைந்துழா யலங்கன் மார்பிற் பண்ணவன் முதலோ ரெல்லாம்
 வெந்திற லவுணன் புன்கோற் குட்படு வினைக டீர்ப்பான்.

(இ - ள்.) அக்கடவுளர் சிலம்பின்கண் தேவதச்ச னென்பான் முற்படச் சிற்ப நூல்முறையானே இயற்றிய செறிந்த ஒளியினையுடைய கோவிலின்கண் படைக் குழாங்களுடன் தங்கினான். பசிய துழாய் மாலையை யணிந்த மார்பினையுடைய திருமால் முதலிய தேவர்களெல்லாம் வெவ்விய வலியினையுடைய சூரன் கொடுங்கோலுக்குட் பட்ட வினைகளை நீக்குபவனாகிய முருகன்.

(வி - ம்.) 'கொத்து', 'கொந்தெ'ன விகாரமாயிற்று. நகர் - ஈண்டுத் திருக்கோயில். அசைதல் - தங்கல். ஆக என்பது இடைச்சொல் இசைநிறை. புன்மை - ஈண்டுக் கொடுமை மேனின்றது. தீர்ப்பான் அசைந்தன னென்க.

(122)

 விசும்பமர் கங்கை தேனு விரைநறு மலர்ப்பூந் தாருத்
 தசும்பம ரமிழ்த மாதி ததைதர வருத்திக் கொண்டே