பக்கம் எண் :

682தணிகைப் புராணம்

 அசும்புருக் குமரற் காட்டி யணிந்தருச் சித்த யிற்றி
 இசும்பெனும் பவங்க ளேங்க வேத்தினர் தொழுது சூழ்ந்தார்.

(இ - ள்.) வானின்கட் டங்கிய கங்கை நீரும் தேனும், நல்ல மலர்ந்த மலர்களானாய மாலையும், குடங்களிற் றங்கிய அமிழ்தமு முதலாகிய வழிபாட்டிற்குரிய பொருள்கள் ததையும் பொருட்டு வர வழைத்துச் சொட்டுகின்ற அழகினையுடைய குமரனுக்கு மண்ணிப் புனைந்து, அருச்சித்து உண்பித்து, வழுக்கென்று சொல்லும்படியான பாவங்கள் ஏங்குதலுறத் தொழுது பழிச்சிச் சூழ்ந்தன ரென்க.

(வி - ம்.) தசும்பு - குடம். அசும்புதல் - சொட்டல். இசும்புதல் - வழுக்குதல்.

(123)

வேறு

 குடுமிகைக் கொண்ட மண்ணுமங் கலமுங்
           கூர்த்தவாண் மண்ணுமங் கலமும்
 அடுதிற லவுண னகர்வயிற் புரித
           லடாதென வகற்சியிற் றூய்மை
 படுமிட னறிந்து செய்தது நிகர்க்கும்
           படையொடு பண்ணவ ரெல்லாம்
 விடுசுட ரிமைக்கு முருவனை யாட்டி
           வியத்தகப் பூசனை புரிதல்

(இ - ள்.) தேவர்கள் யாவரும் சுடர்விட்டு வீசும் வடிவினை யுடைய முருகனை வேற்படையோடு மண்ணுதல் செய்து பூசனை செய்தல், மதிற்கண் ஒருவன் ஒருவனைக்கொன்று அவன் முடிக்கல முதலிய கொண்டு பட்டவேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும், இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கூரிய வாளினை (கொற்றவை மேனிறுத்தி) நீராட்டும் மங்கலமும் கொல்லுந் திறலினையுடைய தாரகன்நகரிற் செய்தல் பொருந்தாதெனச் சேய்மைக்கண்ணே தூயதாகிய இடனையறிந்து செய்ததை நிகர்க்கு
மென்க.

(வி - ம்.) குடுமிகொண் மண்ணு மங்கலம் - போர்செய்த மதிற் கண் ஒருவனை யொருவன் கொன்று அவன் முடிக்கல முதலிய கொண்டு பட்டவேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடுதல், வாண்மண்ணு மங்கலம் - இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்ற வாளினைக் கொற்றவை மேனிறுத்தி நீராட்டுதல். மண்ணுதல் - கழுவுதல். உருவன் - அழகுடையவன்.

(124)

 கடவுளர் வழிபா டறிந்துமற் றியாமுங் கழன்மலர் வந்தனை புரியப்
 படர்குது மெனவந் தணைந்தவன் போலப் பாற்கரன் றிரைக்கட லெழலும்
 நடவிய கடிநாட் புடவிதாழ்ந் தமைதேர் நம்பிரா னேவலிற் றென்பால்
 வடதலைக் கிரிகள் பெயர்வன புரைய வயவர்தேர் புடைவர நடந்தான்.