| (வி - ம்.) நாயகமான படைக்கலம் - பாசுபதப் படை. செந்தில் - திருச்செந்தூர். (127) | | முந்துதா னளித்த வரமும்பின் றந்தை | | | யருளுநா ளிறுதியு முழுதும் | | | புந்திகொண் டிருந்தும் புறப்பொருண் மரபு | | | புவித்தலை வழங்கிலக் கியமாச் | | | சிந்தைசெய் தவுணர் தோற்றமும் வலியுஞ் | | | செய்கையு முழுவதுங் கடாவி | | | அந்திலொற் றாக வாகுவை யைய | | | னகற்றின னவனுந் தாழ்ந் தெழுந்தான். |
(இ - ள்.) முருகப்பெருமான் முன்னர்த் தான் வழங்கிய வரத்தினையும், அதன் பின்னர்த் தன் தந்தையாகிய இறைவனருளிய வாணாளின் முடிவையும் தானறிந்து வைத்தும், புறப்பொருளிலக்கணம் புவியின்கண் வழங்குதற் கிலக்கியமாக நினைந்து அவுணர்கள் பிறப்பும், அவர்கள் வலியினையுஞ் செய்கையினையும், பிறவற்றினையும் வினாவி அவ்விடத்துத் தூதுவனாக வீரவாகு என்பானைப் போக்கினன், அவ்வீரவாகுவும் தாழ்ந்து எழுந்தனன் என்க. (வி - ம்.) முருகன் - தானளித்த வரம், இப்படலம் பத்தாம் செய்யுளில் "தறுகண் ணவுணக் குலத்துச் சாருதிர்" என்றது. புறப் பொருண் மரபு, புறப்பொருளிலக்கணம், இலக்கியங் கண்டிலக்கணமியம்பல் முறையாகலின், பின்னர்ப் புறப்பொரு ளிலக்கணஞ் செய்தற் கேதுவாக முருகன் முன்னர்த் தூதரை யனுப்பிப் பின்னர் போர்க்குச் செல்லுதற்குத் துணிந்தா னென்பார், "புறப் பொருண்மரபு புவித்தலை வழக்கிலக்கியமாச் சிந்தை செய்து" என்றார். அந்தில் - அவ்விடம். (128) | | அளைதொறு மவுண ரரக்கர்நோற் றிருந்தா ரழிதகப் பிலமது புகுத | | | வளமலி கந்த மாதன மிவர்ந்து வயங்குபே ருருக்கொடே "லகும் | | | களிமிகு சூர னகரமு நோக்கிக் காயமே வழியெனச் செல்வான் | | | தளைவுறும் வீர சிங்கனை அழித்துத் தடவிய விலங்கைகுப் புற்றான். |
(இ - ள்.) கந்த மலையின் குகைகள் தோறும் தவஞ்செய்து கொண்டிருந்தாராகிய, அவுணரும், அரக்கரும், வருந்த, அம்மலை பாதலத்தின் கட் செல்லவும், எல்லாவளனு மலிந்த முகந்தமாதன மலையின்மீது ஏறி விளங்குகின்ற பெரிய வடிவினைக்கொண்டு ஏழுலகங்களையும், களிப்பு மிகுந்த சூரனது, நகரத்தினையும் பார்த்து வானமே வழியாகச் செல்பவனாகிய வீரவாகு தன்னைத் தடுத்த வீரசிங்க னென்பவனை யழித்துப் பெருமை பொருந்திய இலங்கைத் தீவினிடத்துக் குதித்தான். (வி - ம்.) பேருரு - விச்சுவரூபம். காயம் - வான். தளைவுறுதல் - தடுத்தல். குப்புறல் - குதித்தல். (129) |