பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்685

 ஆழியு ளிலங்கை யழுந்தவாங் கெதிர்ந்த
           வதிவீர னுயிர்குடித் தேகி
 வாழிய வீர மகேந்திரம் புக்கு
           வாயில்காத் தமர்கய முகத்துப்
 பாழியந் தடந்தோட் பதகனைச் சவட்டிப்
           பட்டினம் படர்ந்தருஞ் சிறையில்
 தாழுறுஞ் சயந்த னுளத்தினைத் தெருட்டிச்
           சார்ந்தனன் சூர்முத லவைக்கண்.

(இ - ள்.) கடலின்கண்ணே இலங்கைத்தீவான தழுந்த அப்பொழுதெழுந்த அதிவீர னென்பானுயிரை யுண்டு சென்று, சூரன் நகரமாகிய வீரமகேந்திரத்தின்கட் சென்று அந்நகர் வாயிலைக் காவல்செய்து தங்கிய வலியுடைய பருத்த தோளினையும், யானைமுகத்தினையுமுடைய பாதகனைக் கொன்று அப்பட்டினத்துச் சென்று நீங்குதற்கரிய சிறையின்கண் தங்கும் இந்திரன் மகனாகிய சயந்த னென்பான் மனத்தினைத் தெருளுறச் செய்து சூரனாகிய முதல்வ னவைக்கட் சென்றன னென்க.

(வி - ம்.) அதிவீரன் - ஓர் அசுரன். வாழிய : அசை. பதகன் - தீவினையாளன். சயந்தன் - இந்திரன் மகன்.

(130)

 எவ்வெவ வையுந் தவ்வெனப் பொலிந்த வீடிலாச் சூரன்வீற் றிருந்த
 அவ்வவைக் களமு மவன்றவி சொளியு மாங்கவன் றேசுமை யாப்பச்
 செவ்விய குமர னருளினோர் தவிசு சிவணலுஞ் சென்றவ ணிருந்தான்
 தெவ்விய சூர னெரியெழ விழித்துச் சிறுவநீ யாரென மொழிவான்.

(இ - ள்.) எவ் வெத்தன்மை யுடையாராகிய பெரியாரவைக் களனும் பொலிவழியப் பொலிவுற்ற தனக்கிணையில்லாச் சூரன் வேறொருவர்க்கில்லாத சிறப்புடன் எழுந்தருளியிருந்த அந்த அவைக் களமும் அவன் தவிசினொளியு மவனழகும் மழுங்க நீதியினையுடைய குமரனருளின் ஓர் தவிசானது பொருந்தச் சென்று அவ்விடத்திருந்தனன். எல்லா வன்மையுங் கொண்ட சூரன் தீயுண்டாக விழித்துச் சிறுவனே நீயார் என்று கேட்கச் சொல்வான் என்க.

(வி - ம்.) தவ்வென - பொலிவழியா. தெவ்விய - கைக்கொண்ட.

(131)

 முக்கண னுயிர்த்த முருகவேள் விடுப்ப
           முன்னிய தூதன்யா னீங்குப்
 புக்கதென் னெனிற்கேள் பொன்னுல கழித்துப்
           புலவரைச் சயந்தனோ டழியத்
 தொக்கபல் லூழி வருத்துதி யன்றே
           துயருமச் சிறைதுமித் தொழிப்பின