| | ஒக்கலோ டின்னும் வாழ்குவை யன்றே | | | லும்பிபோ லொருகணத் திறப்பை. |
(இ - ள்.) மூன்று கண்ணினையுடைய இறைவன் பெற்ற முருகவேள் செலுத்த அடைந்த தூதுவன்யான். இவண் புகுந்ததற்குக் காரணம் என்னையெனிற் கூறுவல் கேட்பாயாக, பொன்னுலகத்தினைக் கெடுத்துத் தேவர்களைச் சயந்தனோடு வருந்தக்கூடிய பல ஊழிக்காலமாக வருத்துகின்றாய் அல்லையோ? தேவர்கள் துன்பினையடையும் சிறையினைக் கெடுத்து, நீக்கின் நின் சுற்றத்தோ டென்று மின்புற்று வாழ்வாய். அங்ஙனஞ் சிறைவீடு செய்யாயாயின் உன் தம்பியாகிய தாரகனைப் போல ஒருகணப் பொழுதின்கண் இறந்தொழிவை, என்க. (132) | | சலந்தரன் முதலா நுன்குலத் தலைவர் தருக்கினாற் றேவரை யின்புக் | | | கலந்தன ரழியக் கவற்றிமாய்ந் ததுநன் றறிதியே யன்றியுந் தளரா | | | வலந்திரு வீரம் வரமிக வுடையார் வல்லுத லில்லவர்க் கவற்றின் | | | நலந்தரு மேகொ லவரழு நீரே நலனழி படையென வறியாய். |
(இ - ள்.) சலந்தர னென்பவனை முதலாகக் கொண்ட உன் குலத்துத் தோன்றிய தலைவர்கள் மனச்செருக்கால் தேவர் இன்புறுதற்கு அலந்தாராகி வருந்தக் கவலச்செய்து மறைந்ததைப் பெரிது மறிவாய். அன்றியும், என்றுந் தளர்வுறாத வெற்றியினையும், வீரத்தினையும், வரத்தினையும் மிகுதியாகப் பெற்றவர் இவைகளில் வன்மையில்லாரை வருத்தின் அங்ஙனம் வருத்தினார்க்கு நன்மையினைத் தரவற்றோ, தர வல்லதன்று; அவ் வன்மையில்லார் அல்லற்பட்டாற்றா தழுத கண்ணீரே அவ்வலியார் செல்வத்தினை யழிக்கும் படையாமென்று நீ அறிவா யென்க. (வி - ம்.) வன்மையில்லார் ஈண்டுத் தேவராகவும், அவர் அழுத கண்ணீரைப் படையாகவுங் கொள்க. "இதனை, | | "அல்லற்பட் டாற்றா தழுதகண்ணீ ரன்றே | | | செல்வத்தைத் தேய்க்கும் படை" |
என்னும் குறளா னறிக. (133) | | ஆதலாற் றேவ ரருஞ்சிறை சீத்தின் | | | பார்மதி யென்றுரைத் தீங்குப் | | | போதென விடுத்தா னென்னலு முளத்துப் | | | பொங்கிய வெகுளிமீக் கிளைப்ப | | | மூதறி வெனக்குக் கிளத்தலா னுமைய | | | னறிவினு முருகனே போலும் | | | வேதனை யிரிந்தோர் தமக்குநன் றுறுப்பன் | | | விடுவனே சிறையகத் தோரை. |
|