| (இ - ள்.) ஆதலானே தேவர்களை நீங்குதற்கரிய சிறையினின்றும் நீக்கி இன்பினை அடையக் கடவையென்று சொல்லி ஈங்கு வருக, என்று செலுத்தினானென்று சொல்ல, சூரனுளத்தின்கட் பொங்கிய சீற்றமானது, மேலே தோன்ற மிக்க அறிவினை! ஆயிரத்தெட் டண்டங்களையுமாளும் எனக்குச் செவியறிவுறுத்தலான் நுந்தலைவன் வடிவானே யன்றி அறிவானும் இளையான்போலும். இங்குநின்றுந் தப்பியோடிய தேவர்கட்கும், துன்பினைப் பெரிதும் சேர்ப்பவனாகிய யான் சிறையகத்துள்ளோரை விடுவனோ என்றான். (வி - ம்.) சீத்து - கெடுத்து. மதி - முன்னிலையசை. உம்மை - எச்சவும்மை. (134) | | எம்பிபோ லெனையு நினைந்துனை விடுத்த | | | விளையவன் யானென வுயங்கத் | | | தம்பியை யெம்பி யாக்குவன் றரும | | | மன்றெனத் தாழ்த்தனன் வேற்கை | | | நம்பியை யெம்பி செல்லிட நென்ன | | | னடத்துவன் வீரமன் றேயென் | | | றம்புவி வியப்பச் சிறுவரால் வேற | | | லமர்ந்துளே னேகுதி யென்றான். |
(இ - ள்.) என் றம்பியாகிய தாரகனைப்போல என்னையும் வலியில னென்று கருதி உன்னைத் தூதுவனாக விடுத்த இளையோனாகிய அம்முருகன், தம்பியை இழந்த என்னைப்போல வருந்த அவன் தம்பியாகிய உன்னை எம்பி இறந்தாற்போல இறக்கும்வண்ணஞ் செய்வேன். தூதுவனைக் கோறல் தரும மல்லவென்று தாழ்த்திருந்தேன். வேலினைக் கையிலுடைய முருகனை என் தம்பியாகிய தாரகன் சென்ற வீரசுவர்க்கத்திற்கு நென்னலே செலுத்தி யிருப்பேன். (இளைஞரைக் கோறல்) வீரர்களுக்கு வீரமல்ல வென்று கருதி அழகிய உலகின்கண் ணுள்ளார் வியப்ப எனக்கிளைய சிறுவர்களால் வெல்லுதலை விரும்பியுள்ளேன். நீ செல்வாயாக என்று கூறினான். (வி - ம்.) இளையவன் - முருகன். உயங்க - வருந்த. என் தம்பியைப்போல இறக்கும்படி செய்வேன் என்றவாறு. வேற்கைநம்பி - முருகன். தம்பியை : முன்னிலைப் படர்க்கை. (135) | | இகந்துரை கேட்ட வீரனுஞ் சினத்தி | | | னியம்புவன் மான்முத லோர்தம் | | | அகந்தையைத் தணித்த வகந்தையா யுண்மை | | | யறைந்தனை தத்துவந் தோறும் | | | நிகழ்ந்திடு மண்ட மளப்பில வவற்று | | | ணிலனுறு மண்டத்தா யிரத்தெட் | | | டுகந்துளன் யானவ் வனைத்துநின் றளிக்கு | | | மொருமுத லுனைவிடு முருகன். |
|