| (இ - ள்.) இகழ்ந்துரைத்த சொல்லினைக் கேட்ட வீரவாகுவும் சீற்றத்தால் சொல்வான்; திருமால் முதலியோர் மனச்செருக்கைத் தணித்த மனச்செருக்கினை யுடையவனே உண்மையையே கூறினாய். தத்துவக் கூட்டங்கள்தோறும் பொருந்துகின்ற அண்டங்கள் எண்ணிலவாம். அவ் வண்டங்களுள் வைத்து நிலத்தினிடத்துப் பொருந்திய அண்டங்களுள் ஆயிரத் தெட்டண்டங்களை உயர்வாகக் கொண்டிருக்கின்றேன் யான்; அத் தத்துவக் கூட்டங்கள் எல்லாவற்றிலுமுள்ள அண்டங்களைக் காக்கும் ஒப்பற்ற தனிமுதல் உன்னைச் செலுத்திய முருகன். (வி - ம்.) இம் முப்பத்தாறாங் கவிமுதல் 41ஆம் கவிவரை (134, 135) கவியில் சூரன் கூறிய வீரமொழிகளுக்கு வீரவாகு தேவர் உரை செய்கின்றார். இப்பாட்டால் சூரன் மூதறிவெனக்குக் கிளத்தலான் என்ற பகுதியிலுள்ள "எனக்கு" என்னுஞ் சொல்லுக்குரை கூறுகின்றார். அகந்தை - செருக்கு. தத்துவங்கடோறும் அண்டங்க ளுளவென்பதை, | | "தராதல முதலாந் தத்துவ கண்டந் | | | தனித்தனி யாயிர கோடி" |
என்னும் நந்தி உபதேசப் படலத்தா னறிக. (136) | | என்றுமோ ரியல்பி னின்றதன் னிலைமை | | | யிருந்தவர்க் கறிவுறுப் பான்போல் | | | என்றுமவ் விளமை தணத்தலின் மையினால் | | | யாவரு முருகனென் றிசைப்பர் | | | நன்றவன் கொளுத்து முதுக்குறை வென்று | | | நலனெனு மிளமையிற் றணவா | | | தொன்றலி னறிவி னானுமந் நாம | | | முள்ளதெக் காலமு மவற்கே. |
(இ - ள்.) எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நின்ற தன்னியற்கை நிலையினைப் பெரிய தவத்தினர்க்குச் செவியறி வுறுப்பவன்போல எக்காலத்தும் அவ்விளமை நீங்குதலின்மையால், யாவரும் இளையோனெனப் பொருள்கொள்ளும் முருகனென்னுந் திருப்பெயருடையானென்று கூறுவர். அவன் பெரிதுந் தன்னடியவர்க்குப் பேரறிவு எஞ்ஞான்று நன்மையினின்று மிளமையினின்று நீங்காது பொருந்தலின், திருவுருவானே யன்றி அறிவினானும் அம்முருகனென்னுந் திருப்பெயர் இளையோனுக்கு எக்காலத்து முளதாமென்னும் பொருள்படக் கூறினாரென்க. (வி - ம்.) சூரன் அறிவினு முருகனே யென்றுகூறிய தொடர் மொழிக்குரை யுரைத்தன னென்க. முன்னிரண்டடியால் வடிவானிளை யவ னென்று சூரன் கூறியதற்கு ஏதுக்காட்டி முருகன் யாவருக்குஞ் செவியறிவுறுக்கு முதுக்குறைவானது நலனென்று மிளமையின் நீங்காது பொருந்துதலான் அறிவினானு முருகனாவா னென்று வற்புறுத்தினார். முதுக்குறைவு - பேரறிவு. (137) |