பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்689

 ஆரடு திகிரிக் கூவிரத் தடந்தே
           ரடுதிறற் களிற்றினம் பரிமா
 வீரரைப் பல்கா லிடமறக் கஞற்றி
           வெஞ்சம ருழப்புழி யுயிர்க்கு
 வாரமுற் றிரிந்த வெமர்க்குவே தனையை
           மண்டிய வெமரொடு மிறந்தியான்
 பாரகத் துறுப்ப னிதுவரும் பொருட்டும்
           பண்ணவர் படுசிறை வீட்டேன்.

(இ - ள்.) ஆர்கள் பொருந்திய உருளைகளோடுகூடிய மொட்டொடு சேர்ந்த பெருமை பொருந்திய தேரினோடு வலியினையுடைய யானையும் செலவினையுடைய குதிரையும், காலாளுமாகிய படையினைப் பலமுறைப் போர்க்களத்தி லிடமின்றாகச் செறித்துக் கொடிய போரினைச் செய்யுங்காலத்து உயிரின்கண் அன்புகொண் டோடிய எம்மவராகிய அவுணர்க்குத் துன்பினைப் பூமியின்கண் (உயிர்மாட்டின்பு கொள்ளாது) என்னொடு பொருந்திப் போரினைச்செய்த எம்மவரோடு யான் இறந்து சேர்ப்பன்; உயிரின்கண் அன்பு கொண்டு ஓடிய அவுணர்க்கும், என்னொடு பொருந்திய அவுணர்க்கும் இத்துன்பம் உளவான் வண்ணம் தேவர்களைப் பொருந்திய சிறையின்கண்ணின்றும் நீக்கெறாறும் பொருள்கொளச் சொல்கின்றாய் என்க. சூரனிருப்பினன்கோ முருகனை வென்று நமக்கின்பினை யளிப்பன் அவனிறத்தல் துணிபக்லின், நாம் ஏன் முருகனோடு பொருது இறக்கவேண்டு மென்றோடிய அவுணர்கள் சூரன் பிறக்கிட்டோடாத வீரர்களுடனே போர் செய்திறந்த பின்னர் அந்தோ சூரனிருப்பின் நாம் இவ்வின்பினை யடைவோமே யென்று நினைக்கும் வண்ணம் வேதனையைச் செய்வேன் என்னும் பொருள்படச் சொல்கின்றா யென்று வீரவாகு தேவர் கூறினார்.

(வி - ம்.) சூரன் "வேதனை இரிந்தோர் தமக்குநன் றுறுப்பன் விடுவனோ சிறையகத் தோரை" என்று கூறிய தொடர்மொழிகளுக்குப் பொருள் கூறினார்.

(138)

 உம்பரைத் தாங்க வருமுரு கனையே நானென வும்பர்க ளுயங்கத்
 தம்பியா நினையு மெம்பியாக் கொள்வ றனக்குது தருமமன் மையினால்
 நம்பிமற் றிசையா னருள்வழிச் சிறையை நலியஞா தியரென வுளத்துப்
 பம்பிய மான முலப்பில ததனாற் பணிந்தது செய்கிலன் றாழ்த்தேன்.

(இ - ள்.) தேவர்களைத் தாங்கும் பொருட்டுத் திருவுருக்கொண் டெழுந்தருளிய முருகக்கடவுளையானாகவும், தேவர்கள் வருந்த அம் முருக னிளவலாகிய நின்னையும் என் தம்பியாகிய தாரகனாகவுங் கொள்வேன்; பதிப்பொருளாகிய தனக்கு பசுத்தன்மையாற் செருக்குற்ற எமரோடு கலத்தலாகிய தொழில் அறநிலையாகா தாதலான் நம்பியாகிய முருகன் உடன்படான் (அவ்விறைவன்) அருள்வழியே தேவர்கள் சுற்றத்தாரன்றோ (அவரை இறைவன் கட்டளையின் சிறைவீடு செய்யின் நகைசெய்வரே) யென்று உளத்தின்கண்ணே நிறைந்த மானமானது