பக்கம் எண் :

690தணிகைப் புராணம்

கெடாது நிலைபெற்றுளது. அங்ஙனம் நிலைபெற்றிருத்தலான் அவனைப் பணிந்து அங்ஙனஞ் சிறைவீடு செய்யாது தாழ்த்தேனென்று பொருள் கொள்ளும் வண்ணங் கூறுகின்றா யென்றா ரென்க.

(வி - ம்.) இறைவனோடு சூரன் கலந்து வாழ்தல் தேவர்கட்கு உடன்பாடன்மை தோன்ற "உம்பர் களுயங்க வெம்பியாக் கொள்வனென்றார்" தேவரைக் காக்கவந்த இறைவன் அத்தேவர்க்குப் பகைவராகிய அவுணரை அடிமையாகக் கோடல் அவனிறைமைக் குணத்திற்குச் சாலா தென்பான் "தனக்குது தரும மன்மையினால் நம்பிமற் றிசையான்" என்றார். 135ஆம் செய்யுளில் முன்னிரண் டடியிலுமுள்ள தொடர்மொழிகட்குப் பொருள் கூறினார். உது - அது. ஞாதியர் - சுற்றத்தார்.

(139)

 நெருநலே பணிந்து முற்றவப் பயனா
           லெம்பிசெ னீள்கயி லாயம்
 முருகனை விடுப்பன் மொய்யம ரிகந்து
           முரிதிரு விழைவது வீரர்
 தருமமன் மையினால் வீரமன் றெனப்போர்
           தனிற்படுந் தகைமையே வேட்டிங்
 கொருசிறு மீனா நீயொளி வேற
           லுவந்தன னெனக்கொள வுரைத்தாய்.

(இ - ள்.) முருகனை நென்னலே வணங்கி அவனருள் வழிபட்டுத் தேவர்களைச் (சிறைவீடு செய்து) முன்னர்ச்செய்த தவப்பேற்றினால் என்றம்பியாகிய தாரகன் சென்ற கைலைக்கு எழுந்தருளச் செய்திருப்பன். மண்டிய போரின்கண் ணின்றும் நீங்கிக் கெடுதற்கரிய பெருமை பொருந்திய செல்வத்தினை விழைவது போர்வீரர் தருமமல்ல வாகலான், வீரமல்ல வென்று போரிலிறக்கு மியல்பினையே விரும்பி இங்குள்ள ஒரு சிறிய விண்மீன்போன்ற யான் பேரொளிப் பொதுமையினையுடைய சூரியன் முதலிய ஒளிப் பொருள்களை வெல்லுதலைக் கருதினே னென்னும் பொருள் கொள்ளும்வண்ண முரைத்தா யென்று வீரவாகு தேவர் கூறினார்.

(வி - ம்.) போர்செய்து போரிலிறப்பதே வீரர்களுக்குச் செல்வமாதலின் யான் இறைவன்பால் அடிமையாகாது போர்செய்து இறப்பேனென்பான் "முரிதிரு விழைவது வீரர்தரும மன்றெனப் போர் தனிற் படுந் தகைமை வேட்டு" என்றார். மீனென்றமையால் சிறு வரால் மீனென்றுங் கூறுவர். மூரி யென்பது விகாரம்.

(140)

 இன்னதுன் கருத்தே லிங்ஙன மாக
           வென்றனன் வீரர்கள் வீரன்
 அன்னது செவியிற் புகுந்தெனக் கண்க
           ளங்கிகான் றுடன்மயிர் பொடிப்ப
 மன்னுயிர் கோறல் பழியிவற் பற்றி
           வன்சிறை யிடுமினென் றுருத்துத்