| | தன்னரு குள்ளோ ராயிரர் தம்மை | | | யேயினன் றறுகண்வா ளவுணன். |
(இ - ள்.) வீரர்களுள் வைத்து வீரனாகிய வீரவாகுதேவர், சூரனே! உன்னெண்ணம் இதுவேயாயி னிங்ஙனமேயாக என்று கூறினன். அஞ்சாமையோடு கூடிய வாட்படையை யுடைய சூரன் வீரவாகுதேவர் சொல்லியது செவியின்கண்ணே செல்லக்கண்க ணெருப்பைக்கான்று உடலில் மயிர்சிலிர்ப்ப (தூதனாக வந்தவன்) நிலைபெற்ற உயிரினைக் கோறல் செய்தல் பழியாகும் இவனைப் பிடித்து வலிய சிறையின்கண் ணிடுமின்க ளென்று கோபித்துத் தன் பக்கலிலுள்ள ஆயிரம் வீரர்களை ஏவினா னென்க. (வி - ம்.) அங்கி - தீ. கோறல் - கொல்லுதல். உருத்து - சினந்து. (141) | | முற்றின ரவரை முடிச்சிகை பற்றி மோதிமுன் னிட்டுநீ யழிவை | | | பற்றுள வெவையு மின்னினி நுகர்தி படர்குவல் யானென வெழுந்தான் | | | வெற்றிகொள் வீரற் பற்றினை தம்மோ வெனவிறற் றானையர் தலைவன் | | | நற்றிற லுடைய சதமுகற் குரைப்ப நன்றெனப் படையினோ டெதிர்ந்தான். |
(இ - ள்.) அவ் வாயிரம் வீரரும் வீரவாகுதேவரைச் சூழ்ந்தனர். அங்ஙனஞ் சூழ்ந்த வீரர்கள் குடுமியைப்பற்றி முடியோடு முடிமோதச் செய்து சூரன் முன்னர்ப் போகட்டு, நீ விரைவில் அழியக்கடவாய், ஆதலால் உனக்கு விருப்புள்ள எல்லாப் பொருள்களையும், இப்பொழுதே நுகர்வாய் யான் இறைவன்பாற் செல்வேன் என்று சொல்லி எழுந்தனன். அதனைக் கண்ட சூரன் வெற்றியைக் கொண்ட இவ் வீரனைப் பற்றித் தருவாயாக! என்று வலியினையுடைய படைத் தலைவனாகிய நல்ல வலியினையுடைய சதமுகனென்னும் அவுணனுக்குச் சொல்ல அவனும் நல்லதென்று படையோடு சென்றா னென்க. (வி - ம்.) இன்னினி - இப்பொழுது. மோ : அசை. சதமுகன் - படைத்தலைவன். (142) வேறு | | இலக்க வீரர்கள் படைவிடச் சூளிகை | | | யிடந்தொன்று மேலோச்சித் | | | தொலைக்க நேர்ந்துடல் சதமுகத் தவனுயிர் | | | துரந்துபே ருருக்கொண்டான் | | | நிலக்கட் டாட்டுணை பெயர்தொறுஞ் சுவட்டின்வர | | | ரிதிப்புன னிமிர்ந்தூரை | | | அலைக்க வைம்பது வெள்ளங்கா வலர்பொர | | | வவையகத் துயிர்மாய்த்தான். |
|