| (இ - ள்.) இலக்கம் வீரர்கள் படையினைச் செலுத்தா நிற்க (அவையின்கண்ணுள்ள ஒரு மேன்மாடத்தினைப் பறித்து அவர்கள் மேலே எறிந்து (தன்னைக்) கெடுக்க எதிர்ந்து மாறுபடுகின்ற சதமுகனுயிரை நீக்கிப் பேருருக் கொண்டனனாகி நிலத்தின்கண் இணையடிகளைப் பெயர்த்து வைக்குந்தோறும் அடிச்சுவடுகளில் கடனீரெழும்பி ஊரை வருத்த ஐம்பது வெள்ளமென்னும் எண்ணையுடைய வீரர் போர் செய்ய அவையின்கண்ணே அவருயிரை மாய்த்தன னென்க. (வி - ம்.) சூளிகை - மேன்மாடம். இடந்து ஓச்சி பேருருக் கொண்டன னென்க. (143) | | மேரு மால்வரை பொருமொரு தூவிகை விரைந்தகழ்ந் தெடுத்தோச்சிச் | | | சூரன் பேரர சவையழித் தோங்கிய சூளிகைக் குலந்தம்மால் | | | வீரர் மாளிகை மேனிலை மண்டபம் விற்பயி னெடுஞ்சாலை | | | கார ளாவிய கடிமதின் முழுவதுங் கனன்றுயி ரொடுஞ்சாய்த்தான். |
(இ - ள்.) மேகந் தங்கிய மேருமலையை யொத்த தூவியினைக் கையால் விரைந்து தோண்டி யெடுத்து எறிந்து சூரன் பெரிய அரசவையைக் கெடுத்து அவ் வரசவையின்கண்ணுள்ள உயர்ந்த சிகரங்களால் வீரர் இல்லவரிசையும், மேன்மாடங்களும் விற்றொழில் கற்கும் சாலையும், மேகமண்டலத்தைப் பொருந்திய மதின்முழுவதுஞ் சீற்றங் கொண்டு அவைகளிலுள்ள உயிரோடுங் கெடுத்தன னென்க. (வி - ம்.) தூவி - சிகரம். ஸ்தூவி யென்றும் வடசொற் றிரிந்து நின்றது. சூளிகை - மேன்மாடம். (144) | | ஆயி ரங்கர மைந்துநூ றெனுமுடி யவுணரா யிரர்சூழ்ந்து | | | மாயி ரும்படை வழங்கினார் தண்டென மராமர முரித்தேந்திச் | | | சேயி ளந்தசை மூளைநெய்த் தோர்கரஞ் சிரமடி நிலம்வீழத் | | | தாய டர்ந்தவர்ப் புடைத்துயிர் முழுவதுந் தனிவிசும் புறவுய்த்தான். |
(இ - ள்.) ஆயிரம் கைகள் அமையப்பெற்று ஐந்நூறென்னுந் தலையினையுடைய அவுணர்கள் ஆயிரவர்கள் சுற்றி மிகப்பெரிய படைகளைத் தொடுத்தனர். தண்டமென்று சொல்லும்வண்ணம் கடப்பமர மொன்றினை முரித்துக் கையிற் பிடித்துச் செவந்த இளந்தசையும், மூளையும், செந்நீரும், கையும், தலையுமுடியுமாகிய இவைகள் நிலத்தின் கண் வீழத் தாவிப் பொருந்தியவர்களை அடித்து அவர்களுயிர்களை வீர சுவர்க்கத்தின்கட் செலுத்தினன் வீரவாகு என்க. (வி - ம்.) மராமரம் - கடப்பமரம். நெய்த்தோர் - செந்நீர். தாய் - தாவி. விசும்பி - ஈண்டு வீரசுவர்க்கம். (145) | | வீரர் வெள்ளமீ ராயிரம் பரிவெள்ள மொராயிரம் வேழந்திண் | | | தேரி ரண்டுமா யிரவெள்ளஞ் சேனைகாப் பாளருந் தற்சூழச் | | | சூரு யிர்த்தவன் வச்சிர வாகுதூ துவனெங்க ணுளனென்றே | | | போரி யற்றிய வடுகளங் குறித்துநேர் போந்தனன் புகுமெல்லை. |
|