| | பயில்பங் கமளா யலர்பட் டவர்பால் | | | துயரே பலகாற் றுறுவிப் பர்களே. |
(இ - ள்.) தங்கிய குற்றத்தோடு கலந்து அதனாற் பழிச்சொல்லை யடைந்தார்மாட்டு உலகினர் பலமுறையும் துன்பத்தையே இயைவிப்பார்கள். அதுபோல வயல்களிற் கட்ட பின்னர்த் தோன்றிய மலரோடு கூடிய புதர்கள் அரிவாளின் வாயிலுறுகின்ற நெற்கதிர்களோடும் அறுபட்டன. (வி - ம்.) பங்கமளாவி யலர்படுதல் - நீரிற் றோன்றும் தாமரை முதலிய கொடிகளுக்குளவாதல் காண்க. பங்கம் - சேறு; குற்றம். அலர் - மலர், பழிச்சொல், துறுவித்தல் - சேர்த்தல். புல் - புதர், கொடிகளின் கூட்டம். குயம் - அரிவாள். (124) | | நிலையா யெழுகா லிருந்தார் நிகரும் | | | சிலைபோ லிருந்தே துயில்வார் சிவணும் | | | தலைதாழ் தருகாற் றடிவுற் றிடலும் | | | அலையாப் படைகொண் டவரொத் ததரோ. |
(இ - ள்.) நெற்பயிரானது நிலைநின்றதாகி யெழுகின்ற காலத்து ஆதனத்தின்கண் இறுமாந்திருந்தாரை யொக்கும். (அப்பயிர் விளைந்து) தலைசாய்தரு காலத்து விற்போல வளைந்திருந்து உறங்குவாரை யொக்கும். (அப்பயிர் விளைந்து) அறுத்தல் செய்தபின்னர்க் கண்படை கொண்டவரை யொத்தது. (வி - ம்.) தலைதாழ்தருகால் சிலைபோலிருந்தே துயிர்வார் சிவணும் என மாற்றுக. அலையாப்படை - (பாயாவேங்கை என்றாற் போல) கண்படையை யுணர்த்திற்று. கண்படை - உறக்கம். இருந்தார் - ஆதனத்தின்கண் இறுமாந்திருந்தார். பயிர் : தோன்றா எழுவாய். பயிர் - சாதியொருமை. (125) வேறு | | குறைத்தபூங் கதிர்ச்சாலி கொடுபோந்து களனெங்கும் | | | செறித்திதனைப் பலவாற்றாற் செலுத்தறத்தி னுயிர்துறக்கம் | | | இறுப்பதுவேண் டாவிதனா னெய்துவா மெனவுளத்தின் | | | அறுத்தவர்போ லுழவரெல்லா மைதுநெடும் போரிடுவார். |
(இ - ள்.) அத் தொண்டை நாட்டிலுள்ள உழவர்களெல்லாம் அரிதலைச் செய்த பொலிவு பெற்ற நெற்கதிர்களைச் சுமை சுமையாகக் கொடுபோந்து களனெங்கும் நெருங்கச்செய்து இந்நெல்லினைப் பலவாறாகப் பயன்தரும் வண்ணம் செய்கின்ற அறப்பயனால் உயிர்கள் விண்ணுலகிற் சென்று தங்குவது வேண்டா; இந்நெற் போரானே அடைவோமென்று உள்ளத்தின்கண் வரையறை செய்தவரைப்போல வியப்பைத் தருகின்ற போரைச் செய்வார். (வி - ம்.) இறுப்பது - தங்குவது; வேண்டா - ஐம்பால் மூவிடத்தும் புதுவது புகுதலாக வந்த எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, இதனை "பண்டைய மல்ல வேண்டா படுக்கவென்றூடிற் றன்றே" என் |