பக்கம் எண் :

70தணிகைப் புராணம்

னும் சிந்தாமணிச் செய்யுளானறிக. அறுத்தவர் - நூன்முறையான் வரையறை செய்தவர். ஐ : வியப்பு, 'ஐ வியப்பாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. து : சாரியை.

(126)

 விண்ணறுத்து மேக்கிவர்ந்தார் வியன்றுறக்கத் தவர்மகளீர்
 அண்ணன்முலை முயக்கன்றி யறியாமை யெதிர்நோக்கிப்
 பண்ணரிய தவந்தானப் பயப்பாட்டி னொடும்விளங்கும்
 மண்ணகலா ரறிஞரென வல்லையவ ணுறாதிழிவார்.

(இ - ள்.) வானினை இடை போழ்ந்து அந்நெற்போரின் மேலேயேறிய உழவர்கள் அகன்ற வானத்துள்ள தேவர்கள், பெண்களின் பெருமை பொருந்திய தனமுயக்கத்தையல்லாமல் வேறொன்றையு மறியாமையை எதிரே கண்ணுற்று இணைவிழைச்சாகிய இழிந்த போகமொன்றேயன்றி வீடு பயத்தற் கேதுவாகிய செயல்கள் ஒன்றும் இன்மையா னன்றே செய்தற்கரிய தானம் தவமாகிய இவற்றின் பயன்படுதலோடு விளங்குகின்ற மண்ணுலக வாழ்க்கையை அறிவுடையார் நீங்காராகி மேற்கொண்டனர் என்று அவ்விண்ணுலகத்துப் பொருந்தாது விரைய ('போரினின்றும்) இறங்குவார்.

(வி - ம்.) துறக்கத்தார் முயக்கன்றி வேறொன்றறியாமை நோக்கி விளங்கு மண்ணை அறிஞ ரகலாரென விழிவர் என வினைமுடிபு செய்க. இது தற்குறிப்பேற்ற அணி.

(127)

 இவற்றின்வழி யீங்கெவரு மிவர்வரெனப் பலகோளும்
 தவச்சிதர்ப்ப வைகறொறுந் ததைந்துரிஞிச் செலனோக்கிக்
 கவர்ச்சியிமை யார்க்குறுத்தல் கடனன்றா லெனக்கதிர்ப்போர்
 அவற்றையெலாந் தணித்துழவ ரருந்தொடக்குக் கடாவிடுவார்.

(இ - ள்.) இந்நெற்போர்களின் வழியா மண்ணுலகின்கண்ணுள்ள யாவரும் விண்ணுலகினுக்கிவர்வரென்று கருதி ஒன்பான்கோள்களும் அப்போரினை மிகக் கெடுக்க நாடோறும் நெருங்கி யுராய்ந்து செல்லுதலைக் கண்ணுற்று உழவர்களும், தேவர்களுக்கு நஞ்செயலா லின்னலுறுத்தல் முறையன்றென்று கருதி நெற்போர்க ளெல்லாவற்றையும் கீழே தணியும்படி செய்து அருமையாகிய பிணையற்கடாக்களைச் சுற்றும் படி விடுவர்.

(வி - ம்.) தவ - மிக, சிதர்ப்ப - சிதைக்க. உரிஞுதல் - உராய்தல். கவற்சி - கவலுதல். தணித்து - கீழே தள்ளி. தொடக்குக் கடா - பிணையற் கடாக்கள். விடுதல் - ஈண்டுச் சுற்றச் செய்தல். இதுவும் மேலையணி.

(128)

 தென்புலத்தார்க் கெதிர்முறைசெய் செயல்போலத் தென்றிசைக்கோன்
 தன்பகட்டுக் கினமான தாங்கள்செய றக்கதென
 முன்புவய லிடனாக முன்னிவிளா வியவீண்டும்
 இன்புறுக்குங் கதிர்த்துகைப்பி னிடனேர்பு திரிந்தனவால்.