| | தாளி னாற்சில தடங்கரத் தாற்சில தடவுந் | | | தோளி னாற்சில சுலாவலிற் சிலமுறு வலிக்கும் | | | கோளி னாற்சில கூர்ந்தெழு முயிர்ப்பினாற் சில்ல | | | வாளி மொய்ம்பினன் விழிப்பினாற் சிலபடை யவிந்த. |
(இ - ள்.) படைகள் வீரவாகுவின் தாளினாற் சில்லவும், பெருமை பொருந்திய கைகளாற் சில்லவும், மலையொடு மாறுபட்ட தோளினாற் சில்லவும், இடசாரி, வலசாரியாகச் சுலாவுறலாற் சில்லவும், வீரத்தாற் புன்சிரிப்புக் கொள்ளுங் குணத்தினாற் சில்லவும், மிக்கெழுகின்ற பெரு மூச்சினாற் சில்லவும், ஆளிபோன்ற வலியுடைய வீரவாகுவின் கட்பார் வையாற் சில்லவும் கெட்டன வென்க. (வி - ம்.) தடவு - மாறுபாடு. "தடவென்கிளவி கோட்டமுஞ் செய்யும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. மொய்ம்பு - வலி. (149) | | இன்ன வாறுநா லாயிர வெள்ளமு மிகலி | | | முன்னு றும்படைத் தலைவரு முறைமுறை விளிய | | | மன்னர் மன்னவன் மதலைவெஞ் சினந்தலைக் கொண்டு | | | கொன்னும் வண்சிலை குனித்தொ ராயிரங்கணை விடுத்தான். |
(இ - ள்.) இவ்வண்ணம் நாலாயிரவெள்ளம்படையுமாறுபட்டுப், போரில் முற்படுஞ் சேனைத்தலைவரும் முறை முறையாக இறக்க, மன்னர்களுள் வைத்து மன்னனாகிய சூரன்மகன் வெவ்விய சீற்றமீக் கொள்ளுதலால் அச்சத்தைச் செய்யும் வளைந்த வில்லினை வளைத்து, ஆயிரங் கணைகளைச் செலுத்தினான். (வி - ம்.) இகலி - மாறுபட்டு. விளிய - இறப்ப. மன்னவன் - சூரபதுமன். (150) | | விடுத்த கோலொரு கையினாற் பிடித்துமென் றுகளாப் | | | படுத்த னன்பதி னாயிரம் பகழிக டூர்த்தான் | | | அடுத்த தண்டினாற் சிதர்த்தன னயுதம்விட் டெறுழ்த்தண் | | | டொடித்தொ ராயிர மவயவந் தொறும்புக வுகைத்தான். |
(இ - ள்.) சூரன்மகன் விடுத்த அம்புகளை ஒருகையினாற் பற்றி மெல்லிய துகளாம்படி வீரவாகுதேவர் கெடுத்தார். அவன் பதினாயிரம் பகழிகளைத் தொடுத்து வலியினையுடைய தண்டத்தினை யொடித்து வீரவாகுதேவர் உறுப்புக்கடோறும் ஆயிரம் அம்புகள் செல்லும்வண்ணஞ் செலுத்தினான் என்க. (வி - ம்.) அயுதம் - பதினாயிரம். (151) | | வருந்தி வாளிபாய் வீரன்வாம் பரியொடு பாகு | | | நெரிந்து நீறவொண் டேரினை யுதைத்தன னேரான் | | | விரைந்து வேறுதேர்ப் பாய்ந்தொரா யிரங்கணை நுதலில் | | | தெரிந்த முத்தினன் சென்றுதே ரெடுத்துவிண் ணெறிந்தான். |
|