| (இ - ள்.) திருச்சீரலை வாயின்கண்ணுள்ள முருகன்செய் அடியின் கண்ணே வணங்கி இவனின்றும்போய்ச் சூரன் முன்னர்த்தான் சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லித் திரும்பின வகையெல்லாம் விண்ணப் பஞ் செய்தாண்டுத் தங்கின னென்க. தன்னிளவல் இறந்ததைக் கேள்வியுற்றுப் புலம்பும் இறைவன், முன்னர் முன்னரே சென்ற ஒற்றர்கள் அறிந்து வந்து ஆண்டுநிகழ்ந்த எல்லாச் செயலையும் சொல்லின ரென்க. (வி - ம்.) வீரவாகுதேவர் சூரன்பால் தூதுவனாகச் சேறற்கு முன்னரே சூரன் தன்னொற்றனை முருகன்பாலனுப்பி யாண்டு நிகழும் நிகழ்ச்சியை அறியக் கருதி இருந்தனனென்பார். "மன்னவன் முன் முந்துபோய வொற்றொற்றி வந்துரைத்தன முழுதும்" என்றார். ஒற்றுதல் - அறிதல். (158) | | சீர மைச்சர்கண் மைந்தர்க ளிளவறேர்ந் தவர்கள் | | | யாரும் வம்மினென் றழைத்தெரிப் பொலஞ்சடைக் கடவுள் | | | வார மைந்தன்றா ரகனொடு மலைதொலைத் தமரர் | | | பார வன்சிறை பாற்றெனத் தூதிவண் விடுத்தான். |
(இ - ள்.) சிறப்பினையுடைய அமைச்சர்கள், தன்மக்கள் தன்றம்பி யாகிய சிங்கமுகன் ஆராய்ச்சி முறையிற் றேர்ச்சியுற்ற சான்றோர் யாவரும், வாருங்கோள் என்றழைத்து ஒளிர்கின்ற பொன்னிறமான சடையினையுடைய இறைவன் அன்பிற்குரிய இளவல் நம்மிளவலாகிய தாரகனுடனே கிரவுஞ்சத்தையுந் தொலைத்துத் தேவர்களைப் பெரிய வலிய சிறையினின்றும் நீக்கென இவண் தூதுவனை அனுப்பினா னென்க. (வி - ம்.) இளவல் - சிங்கமுகன். வாரம் - அன்பு. பாரம் - பெரிய. பாற்றல் - நீக்கல். (159) | | தூது வந்தது மிருந்தது மொழிந்ததுந் துளக்கிப் | | | போத லுற்றதுங் கண்டுகேட் டறிதிரே பொறிகால் | | | கோதை வேலவன் செந்திலான் கூளிவெம் படைகள் | | | ஓதி ராயிரம் வெள்ளமோ டிவணுறு நாளை. |
(இ - ள்.) தூதுவன் வந்ததனையும் (வானினின்றும் ஆசனமிழிய) அதன்க ணத்தூ துவனிருந்ததனையும், அவன் வீரருடனுரைத்த மாற்றங்களையும் இந்நகரையும், அவையையும், கலக்கிப் போதலுற்றதனையும் கண்கூடாகக் கண்டும் அறிந்தார் சொல்லக்கேட்டும் அறிந்திருப்பீர்கள். தீப்பொறியினைக்காலும் மாலையை யணிந்த வேற்படையை யுடையனாகிய திருச்சீரலைவாயான் யாவரும் போற்றத்தக்க இரண்டாயிர வெள்ளங் கூளிப்படையுடனே நாளை இவண் வந்து பொருந்துவன் என்க. (வி - ம்.) இராயிரம் - இரண்டாயிரம். செந்திலான் இவணுறு மென முடிக்க. (160) |