| | களித்து நல்கினன் மார்க்கண்டற் கவனுளங் கைத்து | | | விளிக்க வேண்டுமே லரிதுகொ னம்முடை வீறு. |
(இ - ள்.) இறைவன்றானளித்த நல்லவரத்தினை அளிப்பனோ என்றையங் கொள்ளற்க. மார்க்கண்ட னென்பானுக்குத் தெளிவித்த வாழ்நாள் பதினாறாண்டே யன்றி வேறில்லையாம். அங்ஙனமிருக்க அவன் தன்னை வழிபட்டமையான் அப்பதினாறாட்டைப் பருவம் எக் காலத்தும் பொருந்தக் களிப்பினோடு அருளினான். ஆதலால் நமக்கு வேறொருவர்க்கில்லாத சிறப்பை அவன் வெறுத்து அழிக்கத் திருவுளங் கொள்வானாயின் அவனுக்கிஃதருமையான செயலாகுமோ, ஆகா தென்க. (வி - ம்.) அயிர்த்தல் : எதிர்மறை வியங்கோள். வீறு - வேறொரு வர்க்கில்லாத பெருமை. (166) | | அல்ல தூஉம்வர மளிக்குஞான் றமலநா யகனம் | | | வல்ல சத்தியி னல்லது மற்றெவ ரானும் | | | கொல்லு நீரரல் லீரெனக் கூறின னிளவல் | | | வல்லை மாய்தலிற் சத்தியே யவன்கையில் வடிவேல். |
(இ - ள்.) அல்லாமலும் இயல்பாக மல நீங்கினவனாகிய இறைவன் வரத்தினை நமக்குக் கொடுக்குங்காலத்து நமது வலியசத்தியானன்றி வேறெவரானும் கோறல் செய்யுந் தன்மையுடையீரல்லீர் என்று திருவாய் மலர்ந்தருளினன். நம்மிளவலாகிய தாரகன் இறந்தமையான் அவன் கையிலுள்ள வேற்படை இறைவன் சத்தியே என்பதிலொரு சிறிது மையமின்றா மென்க. (வி - ம்.) அமலநாயகன் - சிவன். நீரர் - தன்மையுடையீர். இளவல் - தாரகன். அவன் - முருகன். (167) | | தத்து வந்தொறு முலப்பில தரணியண் டத்தில் | | | பொத்து நீர்முத லொன்றற்கொன் றளவுபூண் டுயரும் | | | அத்த கும்பல வண்டமும் படைத்தளித் தழிக்கும் | | | சத்தி நம்முயி ருண்பது தாழ்க்குமே சமர்க்கண். |
(இ - ள்.) தத்துவங்கடோறு முளவாகிய அண்டங்கள் அளவில்லாதனவாகும். அத்தத்துவ அண்டங்களுள் மண்ணண்டத்தினும் விரிந்த நீரண்ட முதலிய வண்டங்களுள் ஒன்றினுக் கொன்று பதின் மடங்குயர்ந்திருக்கும். அத்தன்மையவாய பல அண்டங்களையும் படைத்தல், காத்தல், அழித்தலாகிய செயலைச்செய்யும் அச்சத்தி போரின்கண் நம்முயிரைக் குடித்தற்கண் தாழ்க்குமோ தாழா தென்க. (வி - ம்.) உலத்தல் - எண்ணிமுடிதல். பொத்தல் - மூடுதல், ஒன்றற்கொன்றளவு பூண்டுயர்தல் - மண்ணண்டத்திற் பதின்மடங்கு நீரண்டம். நீரண்டத்திற் பன்மடங்கதிகம் நெருப்பண்டம். ஏனையவு மிவ்வாறே கொள்க. இதனைத் தத்துவக் கட்டளைகளா னறியலாம். தாழ்த்தல் - தடைப்படல். (168) |