| | ஈயப் பெறுமென் னைவெல்வா ரெவர்யான் | | | காயப் படுவான் கதிர்வே லவனே. |
(இ - ள்.) சிங்கமுக! நமக்கு வஞ்சனைகளுக் கெல்லாம் இருப்பிடமென்று சொல்லத்தகு மாயையென்பவள் நற்றாயாகப் பொருந்தியுள்ளாள் (இறைவனை நோக்கி நல்ல தவங்களைச் செய்து அவன் எல்லா வரங்களையும் கொடுக்கப்பெற்ற என்னை வெல்பவர் யாவர் : ஒளியோடு கூடிய வேற்படை யுடையா னென்னால் ஒறுக்கப்படுவா னென்க. (வி - ம்.) வைப்பு - இருப்பிடம். அனை - அன்னை. எலாம் - எல்லாம். (175) | | என்றா னிகல்சூர் முதலோ னெனலும் | | | பொன்றா வவுணப் பொருவில் குலமின் | | | றொன்றா தினிநல் வினையென் றுணராப் | | | பின்றே ரரிமா முகன்பே சுவனால். |
(இ - ள்.) சூரனாகிய முதல்வன் இங்ஙனம் கூறினன்; அங்ஙனம் கூறக் கேடுறாமையும், ஒப்பின்மையும் பொருந்திய அவுணர் கூட்டம் ஒழிந்தது. இனி நல்வினைப்பயன் சிறிதும் பொருந்தாதென்று கருதிப் பின்னர் நீதிநூலினை யாய்ந்த சிங்கமுகன் சொல்லத் தொடங்கினன். (வி - ம்.) சூர்முதலோன் - சூரபதுமன். பொன்றா - பொன்றாத; அழியாத. தேர் - ஆராய்ந்த. அரிமா - சிங்கம். (176) வேறு | | கருவயிற் றுறாமை யானுங் ககனங்கா லழனீர் மண்ணேர் | | | மருவுத லானு நோற்ற மாதர்பா லுண்ட லானும் | | | பொருபடை கலைகல் லாது புலவரைக் கொன்று வேதற் | | | கொருசிறை யமைத்துப் பௌவ முண்டவற் கருள லானும். |
(இ - ள்.) இறைவனல்லன் இறைவன் றிருமகனென்று நீ கூறிய முருகன் (இறைவன் நெற்றிக்கண்ணிற் றோன்றியதன்றி) கருவாக ஒருவர் வயிற்றின்கண் பொருந்தாமையானும், (அந் நெற்றிக்கண்ணிற் றோன்றிய பொறிகள்) வான், வளி, அனல், நீர், மண் முதலிய பூதக் கூட்டங்களிற் கலந்திருத்தலானும் (நோலாத ஏனைய மாதர் முலையூட்ட நுகராது) தங்கள் பாலுண்ண வேண்டுமென்று நோற்ற கார்த்திகைப் பெண்கள் பாலையுண்ணலானும், பொருதற்கரிய படைக்கலப் பயிற்சியும் நூல்களையும், ஒருவர்பாற் பயிலாது தேவர்களைத் (தான் பிறந்த ஞான்றே விளையாட்டாகக்) கோறல்செய்து வேதத்தினை யுணர்ந்த பிரமனை ஒப்பற்ற சிறையினிலிட்டுக் கடலையுண்டருளிய தமிழ் முனிவனுக்குத் தமிழினைச் செவியறிவுறுத்தினமையானும் என்க. (வி - ம்.) படைத்தொழில் கல்லாது புலவரைக் கோறலும், கலை கல்லாது பிரமனைச் சிறையிடலும், செய்தா னென்க. இவை நிரனிறை. (177) | | நோற்றலொன் றானுமின்றி நூழிலாட் டயரும் வெள்வேல் | | | ஏற்றிட லானு மொன்ப தெனுமுருப் போல விச்சை |
|