பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்709

 தேர்களிறு பரிவயவ ரிருபதினா யிரம்வெள்ளஞ் செறியத் தன்பால்
 தார்கதுவும் படைத்தலைவர் தும்பைமிலைச் சினர்சூழத் தறுகட் டெய்வப்
 போர்கலவும் படைநிரைத்த சேமத்தே ரொருகோடி புடையே நண்ண
 வார்கலவு முரசு லம்பக் கொடி துவன்ற மதிக்கவிதை நிழற்றச் சென்றான்.

(இ - ள்.) தேரும், யானையும், குதிரையும், காலாளுமாகிய நால்வகைப் படையும் இருபதினாயிரம் வெள்ளம் பொருந்தத் தன்பக்கல் பல போரினும் வென்றி கோடலான் அவ்வெற்றிக் கடையாளமாக வணிந்த மாலையினையுடைய சேனைத் தலைவர்கள் தும்பைமாலை யணிந்தனராகிச் சூழ, அஞ்சாமையையுடைய தெய்வங்களா னருளப்பட்ட போரின்கட் பொருந்து படைக்கலங்களை நிறைத்து வைத்து ஒருகோடி சேமத் தேர்கள் பக்கத்தே பொருந்த, வார் கலக்கப்பெற்ற முரசங்கள் ஒலிக்கக், கொடிகள் நெருங்கச், சந்திரவட்டக் குடைநிழலைச் செய்யச் சென்றன னென்க.

(வி - ம்.) தார் - மாலை. தும்பை - வெற்றிமாலை. சேமத்தேர் - ஏறிய தேருடைந்த காலத்து ஏறுதற்குக் கொணர்ந்து வைத்திருக்கும் தேர்.

(193)

 தன்பெயர்ப்புத் தேட்கின்னுந் தளைசெயினுஞ்
           செய்யுமெனத் தரணி வல்லே
 அன்பினொடுங் கரந்ததெனப் பெரும்பூழி
           கதிரொளிகா லறுப்ப நந்தம்
 மன்பகைஞற் குதவிசெய்த லென்னையென
           மாற்றுதல்போன் மதம்வி லாழி
 கொன்பகடும் வயப்பரியுங் கூர்த்தொழுக்கக்
           கோபுரவா யிலைநீத் திட்டான்.

(இ - ள்.) மண்ணுலகம் தரணியென்னும் தன் பெயரினையுடைய செங்கதிர்க் கடவுட்கு முன்னர் பானுகோபன் தளை செய்ததேயன்றி, இன்னும் தளை செயினும் செய்வானென்று கருதி விரைவாக அன்பினாலே அச்செங்கதிர்க் கடவுளை மறைத்ததென்று சொல்லும்படி செங்கதிரின் கதிரொளியை மண்ணுலகினின்று மெழுந்த தூளி தடைசெய்ய, இங்ஙனந் தடைசெய்தலை யறிந்த பானுகோபன் படையின்கண்ணுள்ள அச்சத்தைத் தருகின்ற யானைகளும், வெற்றியையுடைய குதிரையும், நம் அரசன் பகைவனாகிய வெங்கதிர்க் கடவுளுக்கு உதவிசெய்தல் என்ன காரணமென்று அம் மறைத்தலைச் செய்த உதவியைத் தடுத்தல் போல (யானை) மதத்தினையும், (குதிரை) பல்லடிநுரையையும் அப் பூழியடங்க ஒழுக்குதலைச் செய்யக் கோபுரவாயிலைக் கடந்தா னென்க.

(வி - ம்.) 'தன்' என்றது பூமி. 'தரணி' சூரியனையும், பூமியையும் உணர்த்தும் பலபொரு ளொருசொல். நிலம் சூரியனை மறைத்தாற் போலத் தூளிமறைக்க வென்க. யானையும், பரியும் தம் இறைவனாகிய